மொத்தமா ஏமாந்த மனோஜ்… ஈஸ்வரிக்கு மனசாட்சியே இல்லையோ… சிக்கப்போகும் தங்கமயில்…
விஜய் டிவி சீரியல்களின் தொகுப்புகள்
Vijay TV: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளின் தொகுப்புகள்.
சிறகடிக்க ஆசை
மீனா பூக்கட்டி கொண்டிருக்க முத்து வரும்போது அவரிடம் மண்டபத்தில் நடந்த விஷயங்களை கூறிக் கொண்டிருக்கிறார். அடுத்த நாள் காலை மனோஜுடன் எல்லோரும் கிளம்பி புது வீட்டிற்கு செல்கின்றனர். அங்கிருந்தவர் விஜயாவை லட்சுமி கடாட்சமாக இருப்பதாக கூறி ஐஸ் வைத்து விடுகிறார். தொடர்ந்து மீதி 25 லட்சத்தையும் மனோஜ் கொடுத்து விடுகிறார்.
அதை வாங்கிக் கொண்டு அவர் கிளம்ப எதிரில் வரும் முத்து காருடன் அவரது கார் தட்டி நிற்கிறது. இதனால் கடுப்பாகும் முத்து சண்டைக்கு வருகிறார். பின்னர் அனைவரும் வந்து அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்து விடுகின்றனர். அவரிடம் தான் வீட்டை வாங்கி இருப்பதாக மனோஜ் கூறுகிறார்.
இத்தனை சொத்து இருக்கும் ஒருவர் எதற்கு வாடகை காரில் போக வேண்டும் என முத்து சந்தேகப்பட அவரை மனோஜ் அடக்கி விடுகிறார். எல்லோரும் வீட்டை சுற்றிப் பார்க்கின்றனர். ஸ்ருதி தன்னுடைய அப்பாவிடம் ஆலப்புழாவில் கப்பல் இருப்பதாக பேசிக் கொண்டிருக்கிறார்.
மனோஜையும் விஜயா கப்பல் வாங்க சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். பின்னர், விஜயா மீனாவை டீ போட சொல்ல பழைய பாலாக தான் இருக்கு டீ போட்டு தருகிறேன் என செல்கிறார். பின்னர் வேண்டாம் எனக் கூறி விட குடும்பமாக பேசிக்கொண்டு இருக்கின்றனர்.
பாக்கியலட்சுமி
கோபி வீட்டை விட்டு செல்லவில்லை என்றால் தான் சென்று விடுவேன் என கூறிவிட்டு கோபத்தில் பாக்கியா வெளியில் சென்று விடுகிறார். கோபி தான் ராதிகா வீட்டிற்கு செல்வதாக கூறி என அவருக்கு திடீரென நெஞ்சுவலி வந்துவிடுகிறது. இதனால் ஈஸ்வரி பயந்து போக செழியன் மருத்துவரை அழைத்து வருகிறார்.
அவர் ஒன்றும் பிரச்சனை இல்லை பிபி தான் அதிகரித்து விட்டதாக கூறி செல்கிறார். வீட்டில் வரும் பாக்கியாவிடம் என் பையன் இங்கதான் இருக்கணும். நான் உன்கிட்ட எதுவுமே கேட்டதில்லை எனக் கூறி அவரிடம் கோபியை தங்க வைக்க வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறார்.
தொடர்ந்து கோபியால் இந்த நிலையில் போலீஸ் ஸ்டேஷன் அலைய முடியாது எனக்கூறி கேசையும் வாபஸ் வாங்க கூறுகிறார். இதனால் பாக்கியா அதிர்ச்சி அடைந்து நிற்கிறார். இனியா மற்றும் செழியன் கூட பாக்கியாவிற்கு ஆதரவாக பேசாமல் கோபிக்கு ஆதரவாக பேச அவர் உடைந்து நிற்கிறார். ஜெனி யார் பேச்சையும் கேட்காதீங்க ஆன்ட்டி உங்களுக்கு என்ன தோணுதோ அதை செய்யுங்க என்கிறார். ஈஸ்வரிடம் பேசிக் கொண்டிருக்கும் கோபி எழில் மீண்டும் வீட்டிற்கு அழைக்க வேண்டும் என கூப்பிடுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2
வெற்றிவேல் தன்னுடைய அம்மா மற்றும் மனைவியை மிரட்டி விட்டு செல்கிறார். அந்த நேரத்தில் பழனி வர சக்திவேல் வந்து அவரையும் மிரட்டி விட்டு செல்கின்றார். இதனால் அப்பத்தா அழுது கொண்டிருக்கிறார். வீட்டில் கதிர் மற்றும் ராஜி பேசிக் கொண்டிருக்கின்றனர். மீண்டும் வேலைக்கு செல்வதாக கதிர் முடிவெடுக்கிறார்.
வீட்டில் தங்கமயிலை அழைக்கும் பாண்டியன் நாளைக்கு சென்று வேலையில் சேருமாறு கூறுகிறார். சரவணன் பார்த்துக்கொள்ளுவார் என நினைத்த தங்கமயில் இதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். அவரிடம் கேட்க அப்பா சொல்றது தான் சரி நீ வேலைக்கு செல் எனக் கூறி விடுகிறார். மீனா மற்றும் ராஜி தங்கமயிலுடன் வந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.