ஓவர் சந்தோஷத்தில் மனோஜ்... செந்திலின் திடீர் கோபம்... ஈஸ்வரிக்கு ஆப்படித்த எழில்
விஜய் டிவி சீரியல்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்களின் தொகுப்புகள்
Vijay TV: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்களின் தொகுப்புகள்.
பாக்கியலட்சுமி
ஈஸ்வரி சொன்ன விஷயங்களை ஜெனி செல்வியிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் எழில் வர பாக்கியா சந்தோஷத்தில் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். கோபி மற்றும் ஈஸ்வரி எழிலை இந்த வீட்டிற்க்கே வந்து விட வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
எழில் பதில் சொல்வதற்கு முன் பாக்கியா அவன் இப்போது இங்கு வரமாட்டான் என கூறிவிடுகிறார். இதில் ஈஸ்வரி கோபம் அடைகிறார். அவன் இங்கிருந்து எதற்கு போனான் என உங்க மகனுக்கு தெரியாது. உங்களுக்கு தெரியும் தானே. அது முடியிற வரை இங்கு அவன் வரமாட்டான் என மறுத்து பேசி விடுகிறார்.
அமிர்தா மற்றும் எழிலும் பாக்கியா சொன்னதையே கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகின்றனர். அவர்கள் போனதும் ஈஸ்வரி பாக்கியாவிடம் கோபப்படுகிறார். கோபி, பாக்கியாவிடம் வந்து நம்ம குடும்பம் தான் எல்லாமே என பேசிக்கொண்டு இருக்கிறார். இதனால் பாக்கியா எரிச்சல் அடைந்து அவரிடம் கடுப்படித்து விட்டு அங்கிருந்து செல்கிறார். ரூமில் இருக்கும் கோபி ராதிகாவிற்கு கால் செய்கிறார்.
தனக்கு திடீரென உடல்நிலை சரியில்லை என கூற அவரை பார்க்க பாக்கியா வீட்டிற்கு வருகிறார் ராதிகா. நாளை மயூவின் பிறந்தநாள் என்றும் வீட்டிற்கு வர முடியுமா எனவும் கேட்க கோபி தயங்கி நிற்கிறார்.
சிறகடிக்க ஆசை
வீட்டில் எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் நியூமராலஜிஸ்ட் வர வீட்டிற்கு பெயரை தேர்வு செய்ய வர சொல்லி இருப்பதாக விஜயா கூறுகிறார். அவரும் உட்கார்ந்து பல கட்ட யோசனைக்கு பிறகு ரோமயா என விஜயா, ரோகிணி, மனோஜ் பெயரில் இருந்து ஒரு பெயரை சொல்லிவிட்டு செல்கிறார்.
இந்த பேரை தினமும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என கூறிவிட்டும் செல்கிறார். இதனால் விஜயா அதீத மகிழ்ச்சியில் இருக்கிறார். இதைத்தொடர்ந்து மனோஜின் பார்க் நண்பர் பேய் ஓட்டும் அம்மா ஒருவரை அழைத்துக் கொண்டு வர மனோஜிற்கு சிலிர்க்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2
அரசியை கவர தன் நண்பர்களை திட்டமிட்டு அனுப்புகிறார் குமார். அவர்களும் சென்று அரசிடம் வழிமறித்து பிரச்சனை செய்கின்றனர். உள்ளே சென்று ஹீரோயின் காட்டலாம் என குமார் கிளம்ப அந்த நேரத்தில் செந்தில் மற்றும் பழனி அங்கு வந்து அதை தடுத்து அரசியை காப்பாற்றி விடுகின்றனர்.
தங்கமயில் வீட்டில் நடந்த பிரச்சனைகளை கூறி தன் அம்மா மற்றும் அப்பாவிடம் உதவி கேட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார். இதற்கு தங்க மயிலின் அப்பா இன்னைக்கு நீ சர்டிபிகேட் எடுத்துக்கொண்டு செல்வது போல வீட்டிற்கு சென்று விடு. கவரிங் நகைகளையும் சேர்த்து நான் வந்து திருடி சென்று விட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும் எனக் கூறி விடுகிறார்.
வேறு வழியில்லாமல் தங்கமயில் மற்றும் அவருடைய அம்மா இதற்கு ஒப்புக்கொள்கின்றனர். கதிர் வேலைக்கு கிளம்ப கோமதி மற்றும் ராஜி தடுக்க பார்க்கின்றனர். ஆனால் அவர் செலவுக்கு பணம் வேணும் எனக்கூறி கிளம்பி விடுகிறார். இது குறித்து பாண்டியன் வீட்டில் பேசிக் கொண்டிருக்க செந்தில் தேவை அவனுக்கு பணம் வேண்டும். நீங்கள் கொடுத்தால் அதைச் சொல்லிக் காட்டுவீர்களே என பாண்டியனிடம் கூற அவர் கோபப்படுகிறார்.