எரிச்சல் கொடுக்கும் ரோகிணி… கடுப்பில் தங்கமயில்… கோபியை வெறுத்த ராதிகா…

விஜய் டிவி சீரியல்கள்

By :  Akhilan
Update: 2024-12-30 07:34 GMT

விஜய் சீரியல்

Vijay serials: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளின் தொகுப்புகள்.

பாக்கியலட்சுமி

கோபி ராதிகாவை பார்க்க அவர் வீட்டிற்கு வந்திருக்கிறார். அதுபோல பாக்கியா வீட்டிலும் ஈஸ்வரி அவரிடம், ராதிகாவைப் பார்க்க கோபியை அனுப்பி வைத்ததற்காக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். வீட்டிற்கு வரும் கோபி ராதிகாவிடம் எதற்காக வீட்டை காலி செஞ்சாய் என கேட்கிறார்.

இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கலாம் இல்லையா எனக் கூற உங்க வீட்ல எனக்கு செஞ்சது, நீங்க எனக்கு செஞ்சது எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டேன். என் பொண்ணு அவ பொறந்த நாளைக்கு உங்க கிட்ட பேச வாசல் காத்திருந்தா அதை கூட பொறுத்துக்கிட்டேன். அவ மட்டும் எதுக்கு பாசத்துக்கு ஏங்கனும் என்கிறார்.

ஈஸ்வரி வீட்டில் பாக்கியாவிடம் சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார். என் பையன் என் கூடவே இருக்கேன்னு சத்தியம் பண்ணி கொடுத்து இருக்கான் என்கிறார். அவர் வந்து சின்ன குழந்த இல்ல அவருக்கு குடும்பம் இருக்கு என பாக்கியா கூற நாமதான் அவன் குடும்பம் என்கிறார் ஈஸ்வரி.

நீங்க வேணா அவர் குடும்பமா இருக்கலாம் நான் இல்லை என்கிறார். நான் அவனிடம் நீ பாக்கியாவுடன் சேர்ந்து வாழனும் எனக் கூறினேன். அவனும் சும்மா தான் இருந்தான் அவனுக்கு அடி மனசில் ஆசை இருக்கு என்கிறார். இதில் கடும் கோபமாகும் பாக்கியா ஈஸ்வரியை திட்டிவிட்டார் அங்கிருந்து செல்கிறார்.

ராதிகாவும் கோபியிடம் இப்ப கூட உங்களுக்காக வர தோணலை. பாக்கியா சொன்னதனால் தான் இங்கு வந்து இருக்கீங்க. இதற்கு மேலும் நான் உங்களோடு இருந்தா என்னோட சந்தோஷம் எல்லாம் போயிரும் எனக் கூற கோபி அதிர்ச்சியாகி நிற்கிறார்.

சிறகடிக்க ஆசை

வீட்டில் கோபமாக ரோகிணி உட்கார்ந்திருக்க ஸ்ருதியின் அம்மா கால் செய்து காசு விஷயத்தை கேட்கிறார். இதுக்கு கடுப்பாகும் ரோகிணி இது எங்க குடும்ப விஷயம் என மூஞ்சில அடிச்சது போல பேசி போனை வைத்து விடுகிறார். அந்த விஷயமும் விஜயா காதுக்கு செல்ல ரோகிணியை கோபமாக திட்டி விட்டு செல்கிறார்.

இதில் கடுப்பாகும் ரோகிணி ஸ்ருதியிடம் சென்று உங்கள் அம்மா எனக்கு எதுக்கு போன் பண்ணனும் என அவரிடம் சண்டை போடுகிறார். சாதாரணமாக தான் இந்த விஷயத்தை கூறினேன் என ஸ்ருதி சொல்ல என் விஷயத்துல தான் நீங்க ரெண்டு பேரும் தலையிடுறீங்க என திட்டி விட்டு செல்கிறார் ரோகிணி.

ஸ்ருதியை அமைதியாக இருக்க சொல்கிறார் மீனா. மனோஜ் கடையில் இருக்க அவருக்கு கால் செய்யும் விஜயா இன்று நீ வீட்டுக்கு வர வேணாம் கடையிலே தங்கி வேலையை பார் என கூறி விடுகிறார். ரோகிணி கால் செய்ய தான் இன்று வீட்டுக்கு வரமாட்டேன் என கூறிவிடுகிறார் மனோஜ்.

வெளியில் வரும் விஜயா மீனாவிடம் மனோஜ்க்கு சமைக்க வேண்டாம் என கூறிவிடுகிறார். இதை அறியும் ரோகிணி எனக்கு முன்னாலேயே இவங்களுக்கு விஷயம் தெரிஞ்சிருக்கு என நினைக்கிறார். ரோகிணியிடம் விஜயா நடந்துகொள்ளும் விஷயங்களை முத்துவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார் மீனா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2

பாண்டியன் சிசிடிவி தெரியவில்லை என சண்டை போட்டுக் கொண்டிருக்க கதிர் அதை சரி செய்து விட்டு வருகிறார். தொடர்ந்து அவர் வெளிச்சமாக இல்லை என வம்பு செய்ய குடும்பமே கடுப்பாகிவிடுகிறது. பின்னர் வந்து படுக்கும் கதிர், ராஜியுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.

அவர் தான் பெரிய அத்தலெட் எனக் கூற என்னுடன் ஓடி ஜெயிச்சு காட்டு என சவால் விடுகிறார். சரவணன் பேசிக் கொண்டிருக்க தங்கமயில் அவர் செய்வதை பார்த்து கோபமாக இருக்கிறார். பின்னர் வீட்டில் சொல்லிவிட்டு கதிர் மற்றும் ராஜி கிரவுண்டிற்கு செல்கின்றனர்.

Tags:    

Similar News