பச்சக்குனு கொடுத்து முடிச்சிடலாம்! ஹீரோயின் ஓகே சொல்லியும் லிப்லாக் காட்சியில் நடிக்க மறுத்த ஹீரோக்கள்
Lip lock scene: ஒரு படத்தை ப்ரோமோட் பண்ணுவதற்கு என்னெல்லாம் டெக்னிக் பயன்படுத்தவேண்டுமோ அதையெல்லாம் பயன்படுத்தி படத்தை ஒட வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக படத்தில் லிப் லாக் காட்சிகள் இருந்தால் டிரெய்லரில் கொண்டு வந்து இன்னும் எதாவது அது சம்பந்தப்பட்ட காட்சிகள் இருக்குமோ என பார்க்கும் ரசிகர்களையும் தூண்டி விடுகிறார்கள். அந்த வகையில் ஒரு சில நடிகைகள் ஓகே சொல்லியும் லிப் லாக் சீனில் நடிக்க மறுத்த நடிகர்களைத்தான் பார்க்க இருக்கிறோம். சிவகார்த்திகேயன்: இன்று […]
Lip lock scene: ஒரு படத்தை ப்ரோமோட் பண்ணுவதற்கு என்னெல்லாம் டெக்னிக் பயன்படுத்தவேண்டுமோ அதையெல்லாம் பயன்படுத்தி படத்தை ஒட வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக படத்தில் லிப் லாக் காட்சிகள் இருந்தால் டிரெய்லரில் கொண்டு வந்து இன்னும் எதாவது அது சம்பந்தப்பட்ட காட்சிகள் இருக்குமோ என பார்க்கும் ரசிகர்களையும் தூண்டி விடுகிறார்கள். அந்த வகையில் ஒரு சில நடிகைகள் ஓகே சொல்லியும் லிப் லாக் சீனில் நடிக்க மறுத்த நடிகர்களைத்தான் பார்க்க இருக்கிறோம்.
சிவகார்த்திகேயன்: இன்று கோலிவுட்டில் ஒரு கலக்கல் மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். எப்படி ஆகுமோ தன் வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு சாதாரண மனிதர்தான் சிவகார்த்திகேயன். ஆனால் இன்று ஒரு சில பேரை வாழ வைத்துக் கொண்டிருக்கும் நடிகராக திகழ்ந்துவருகிறார். இந்த நிலையில் அவர் நடித்த ரெமோ, பிரின்ஸ் போன்ற படங்களில் லிப் லாக் காட்சிகள் இருந்ததாம். ஆனால் முடியவே முடியாது என வாயை மூடிக் கொண்டாராம் சிவகார்த்திகேயன்.
இதையும் படிங்க: சிம்பு வாழ்க்கையை கெடுக்க திட்டமிட்ட பிரபல நடிகர்… அட சும்மா இருந்து சூனிய வேலைய பார்க்குறாரே!
சிபிராஜ்: சத்யராஜ் மகனான சிபிராஜ் பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவரது அப்பா போன்ற புகழை அடையவில்லை என்றாலும் ஏதாவது செய்யவேண்டும் என்பதற்காக முயற்சி செய்து கொண்டு வருகிறார். அவர் நடித்த சத்யா திரைப்படத்தில் ரம்யா நம்பீசனுடன் ஒரு லிப் லாக் சீன் வந்ததாம். அவர் சொன்ன காரணம் தான் வித்தியாசமாக இருந்தது. சிபிராஜுக்கு ஒரு மகன் இருக்கிறார். ‘பையன் பெரியவனாக மாறட்டும்.அதன் பிறகு அப்படியெல்லாம் நடிக்கிறேன். நான் வளர்ந்த பிறகு தான என் அப்பா நடிச்சார்’ என கூறி தன் பையனுக்காகத்தான் லிப் லாக் சீனில் நடிக்கவில்லையாம் சிபிராஜ்.
உதயநிதி: கழகத் தலைவன் படத்தில் நடிக்கும் போது லிப் லாக் காட்சி வைத்தார்களாம். ஆனால் உதய நிதிதான் ‘ஐயோ வேணாங்க’ என கூறி மறுத்து விட்டாராம். ஏற்கனவே பிற நடிகைகளிடம் சேர்ந்து நடிக்கும் போது உதயநிதியின் மனைவி கிருத்திகா பாத்து நடிக்கனும் என்று கண்டீசன் போடுபவர். அப்படி இருக்கும் போது எப்படி லிப் லாக்கில் எல்லாம் நடிப்பார் உதயநிதி. அதுமட்டுமில்லாமல் அதையும் தாண்டி வேண்டுமென்றால் சிஜி போட்டு எடுத்துக் கொள்ளுங்கள் என்று உதயநிதி சொன்னாராம்.
இதையும் படிங்க: மகன் பிறந்தும் பார்க்க போகாத நாகேஷ்!.. காமெடி நடிகருக்குள் இவ்வளவு சோகமா?!…
விஜய்சேதுபதி : மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவரும் த்ரிஷாவும் சேர்ந்து நடித்த 96 படம் எந்தளவு வெற்றியை பெற்றது என அனைவருக்கும் தெரிந்திருக்கும்.அந்த படத்தில் த்ரிஷாவை விமான நிலையத்திற்கு கொண்டு சென்று விடும் போது கடைசியாக இருவரும் பேசிக் கொண்டிருப்பார்கள். அந்த நேரத்தில் ஒரு லிப் லாக் காட்சி இருக்கும் மாதிரி வைத்திருந்தார்களாம். ஆனால் விஜய்சேதுபதிதான் இதெல்லாம் வேண்டாம் என சொல்லி மறுத்து விட்டாராம்.