திட்டி பேசிய ரஜினி!.. அமைதியாக இருந்த தயாரிப்பாளர்!.. ஜெயலலிதாவுக்கு வந்த கோபம்!..

by sankaran v |   ( Updated:2024-04-30 10:12:11  )
JJ, Rajni
X

JJ, Rajni

சூப்பர்ஸ்டார் ரஜினியின் பல படங்களைத் தயாரித்தவர் ஆர்.எம்.வீரப்பன். தனது சத்யா மூவீஸ் நிறுவனம் சார்பில் ராணுவ வீரன், மூன்று முகம், ஊர்க்காவலன் என பல படங்களைத் தயாரித்துள்ளார். அதே நேரம் பாட்ஷா என்ற ரஜினியின் மெகா ஹிட் படத்தைத் தயாரித்தவரும் அவர் தான்.

இந்தப் படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இந்தப் படம் தமிழ்நாட்டு அரசியலில் பெரிய பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க... அஜித்கிட்ட இருந்த அந்த ஒரு விஷயம்! ‘பில்லா’ல அதான் ஒர்க் அவுட் ஆச்சு.. இப்படி வேற இருக்கா?

பாட்ஷா படத்தின் வெற்றி விழா நடந்த சமயம். ரஜினிகாந்த் பேசும்போது, மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்றார். அதற்கு தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பனும் அமைதியாக இருந்துள்ளார். இது அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு மிகுந்த ஆத்திரத்தை உண்டாக்கியதாம். ஆர்எம்.வீரப்பன் எம்ஜிஆருக்கு விசுவாசியாக இருந்தவர்.

அந்த சமயத்தில் ஜெயலலிதாவும் ஆர்.எம்.வீரப்பனின் இந்த செயலால் ஆத்திரப்பட்டு அவரது அமைச்சர் பதவியைப் பறித்தாராம். அதன்பிறகு அதிமுகவில் இருந்து வெளியே வந்த ஆர்.எம்.வீரப்பன், எம்ஜிஆர் பெயரில் தனிக்கட்சியைத் தொடங்கினார். ரஜினி பாட்ஷா பட விழாவில் பேசிய பேச்சு அடுத்த தேர்தலில் அதிமுகவின் படுதோல்விக்கும் காரணமாக அமைந்தது.

ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற நிலையில் தன் உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியலுக்குள் நுழையாமல் நழுவி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்எம்.வீரப்பன் தனது சத்யா மூவீஸ் நிறுவனம் மூலம் எம்ஜிஆரை வைத்துப் பல படங்களை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Baasha

Baasha

1995ல் சுரேஷ் கிருஷ்ணா இயக்க, தேவாவின் இசையில் வெளியான படம் பாட்ஷா. மாணிக் பாஷாவாக வந்து கலக்கும் ரஜினி நம்மை எல்லாம் அசர வைத்து இருப்பார். அதே நேரம் மாணிக்கம் என்ற கேரக்டரில் சாதாரண ஆட்டோ ஓட்டுநராகவும் வந்து ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை அடித்திருப்பார் ரஜினி. அவர் மாணிக் பாஷாவாக மாறும்போது இவரா அப்படி நடித்துள்ளார் என நம்மையே வியக்க வைக்கும். சண்டைக்காட்சிகளில் அனல் பறக்கும்.

படத்தில் ரஜினியுடன் சம பலத்தில் வில்லனாக ரகுவரன் மார்க் அண்டனியாக வந்து அசர வைப்பார். இவர்களுடன் நக்மா, சரண்ராஜ், ஜனகராஜ், விஜயகுமார், ஆனந்தராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். படம் ரஜினியின் திரையுலகப் பயணத்தில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. இது இன்டஸ்ட்ரியல் ஹிட் அடித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story