ஒரு பொண்ணோட வாழ்க்கைய சீரழிச்சவன்தானே நீ? நிக்‌ஷனை பார்த்து பிரதீப் சொன்னதுக்கு பின்னாடி இவ்ளோ அர்த்தமா?

by Rohini |   ( Updated:2023-11-05 17:52:15  )
nixen
X

nixen

BiggBoss Season 7: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால்
அது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். உலகெங்கிலும் உள்ள தமிழ் ரசிகர்களால் அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாகவும் இந்த பிக்பாஸ் திகழ்கிறது.

இந்த சீசன் முழுவதுமாக இளைஞர் பட்டாளத்துடன் களமிறங்கியிருக்கிறது. அதனாலேயே இன்றைய இளம் தலைமுறையினர் என்ன மாதிரியான சேட்டைகள் செய்வார்களோ அதெல்லாம் பிக்பாஸ் வீட்டிற்குள்ளும் நடக்கிறது. இதை பார்க்கும் ரசிகர்கள் இன்னும் என்னவெல்லாம் பார்க்கப் போறோமோ என்ற மன நிலையில்தான் இந்த சீசனையே பார்க்கிறார்கள்.

இதையும் படிங்க: ஒரு சைடா காட்டி உசுர வாங்கும் தர்ஷா குப்தா!. இன்னைக்கு நைட்டுக்கு இது போதும்!..

இந்த நிலையில் நேற்று நடந்த எபிசோடில் பெரும்பான்மையான போட்டியாளர்கள் பிரதீப்பை எதிர்த்து ரெட் கார்டை தூக்கினர்.ஓவ்வொரு போட்டியாளரும் உள்ளே போகும் போது கடைசியான பிரதீப்புடன் நிக்‌ஷன் தான் ஹாலில் அமர்ந்திருந்தார். அப்போது நிக்‌ஷனை பார்த்து பிரதீப் ‘ஒரு பொண்ணோட வாழ்க்கைய அழிச்சவன் தானே நீ’ என கத்தினார்.

ஆனால் பிரதீப் சொன்னதுக்கு பின்னாடி இப்படியெல்லாம் அர்த்தம் இருக்கிறதா என வைரலாகும் செய்தியை பார்க்கும் போது நினைக்க வைக்கிறது. பிக்பாஸ் வீட்டில் வரம்பு மீறி நிக்‌ஷனும் ஐஸூவும் நடந்து கொள்ளும் காட்சிகள் சில ஒளிபரப்பானது. முத்தமிடுவதும், அதுவே ஒரு நேரத்தில் எல்லை மீற வைக்கிறது. இதை பார்த்த ஐஸு வீட்டார் பொருக்க முடியாமல் பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததாகவும் தன் பொண்ணை அழைத்துக் கொண்டு போவதாகவும் கூறினார்களாம்.

இதையும் படிங்க: ஆர்வக்கோளாரில் கமல் செய்த வேலை!. ரத்தம் வழிந்து பிளாஸ்டிக் சார்ஜரி வரை போன சம்பவம்…

ஆனால் எமர்ஜென்சி நேரத்தில்தான் திடீரென போட்டியாளர் வெளியேற்றப்படுவார். அதுதவிர அனுப்ப முடியாது என சொல்லிவிட்டார்களாம். அதுமட்டுமில்லாமல் நீங்கள் சொன்னதாக உங்கள் ஸ்தானத்தில் நாங்கள் ஐஸுவை எச்சரிக்கிறோம் என்று சொல்லி அனுப்பிவிட்டார்களாம். ஒரு வேளை இது தெரிந்துதான் பிரதீப் நிக்‌ஷனை இப்படி சொல்லியிருப்பாரோ என்று வழக்கம் போல நெட்டிசன்கள் உருட்ட ஆரம்பித்துவிட்டனர்.

Next Story