ஆர்வக்கோளாரில் கமல் செய்த வேலை!. ரத்தம் வழிந்து பிளாஸ்டிக் சார்ஜரி வரை போன சம்பவம்...

Kamalhaasan: 5 வயது முதலே சினிமாவில் நடிக்க துவங்கியவர் கமல்ஹாசன். ஏவிஎம் நிறுவனம் தயாரித்த களத்தூர் கண்ணம்மா படம் மூலம் நடிக்க துவங்கினார். சில படங்களில் சிறுவனாக நடித்தார். வாலிப பருவத்தை எட்டியதும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார். அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சி போன்ற சில படங்கள் மூலம் பாலச்சந்தர் கமலை ஹீரோவாக மாற்றினார்.

அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்து காதல் மன்னனாக மாறினார். பாலச்சந்தரின் இயக்கத்தில் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள பல படங்களிலும் நடித்தார். தான் நடிக்கும் படங்களில், கதைகளில் பரிசோதனை முயற்சிகளை செய்து பார்த்தவர். தமிழ் சினிமாவில் நன்றாக தொழில்நுட்பத்தை பற்றி அதிகம் தெரிந்தவர் கமல் மட்டுமே.

இதையும் படிங்க: கமல் கேட்ட கேள்வியில் ஆடிப்போன தயாரிப்பாளர்…. அப்படி என்னதான் கேட்டாரு?

இவரின் நடிப்பில் வெளிவந்த அபூர்வ சசோகதர்கள் படத்தில் உயரம் குறைவான குட்டி அப்புவாக எப்படி நடித்தார் என்பது இப்போதுவரை திரையுலகை சேர்ந்த பலருக்குமே புரியவில்லை. பேசும் படம், நாயகன், மைக்கேல் மதன காமராஜன், குணா, தேவர் கமன், மகாநதி, விஸ்வரூபம், தசாவதாரம் என ஆச்சர்யப்படுத்திய நடிகர் இவர்.

கமலுக்கு நடிப்பு என்பது வெறும் ஃபேஷன் இல்லை. தொழில் மட்டுமே இல்லை. அதுதான் அவருக்கு உயிர் மூச்சி. அதுதான் அவரை இயங்கவும் வைக்கிறது. சினிமாவுக்காக பல ரிஸ்க்குகளையும் கமல் எடுத்துள்ளார். சொந்த பணத்தை போட்டு பரிசோதனை முயற்சிகளை செய்து பலமுறை நஷ்டமும் அடைந்திருக்கிறார். இப்போது, விக்ரம் படம் மூலம் ஒரு சூப்பர் ஹிட் கொடுத்து தானும் களத்தில் இருப்பதாக காட்டியுள்ளார்.

இதையும் படிங்க: உங்களுக்கு அவரு தான முக்கியம்..! எஸ்.பி.முத்துராமனிடம் முரண்டு பிடித்த கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த்..!

அதேபோல், தான் நடிக்கும் படங்களின் சண்டை காட்சிகளில் கமல் அதிக ரிஸ்க்கையும் எடுப்பார். 80களில் கமலை வைத்து பல திரைப்படங்களை இயக்கிவர் எஸ்.பி.முத்துராமன். இவர் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘சகலகலா வல்லவன் படத்தின் ஹேப்பி நியூ இயர் பாடலை எடுக்கும்போது கண்ணாடியை உடைத்துக்கொண்டு கமல் பைக்கில் வருவது போல ஒரு காட்சி வரும்.

அதில் டூப் போட வேண்டாம் நான்தான் நடிப்பேன் என அடம்பிடித்து கமல் நடித்தார். ஷாட் முடிந்ததும் பார்த்தால் அவரின் முகத்திலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. உடனே, மருத்துத்துவமனைக்கு அழைத்து போனோம். தையல் போட்டால் தழும்பு போல மாறிவிடும் என்பதால் அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்தோம்’ என கூறினார்.

இதையும் படிங்க: சிவாஜி குடும்பத்திற்காக கமல் இதை செய்வாரா? பழச நினைச்சு பார்த்தா கண்டிப்பா நடக்கும்..

 

Related Articles

Next Story