கமல் கேட்ட கேள்வியில் ஆடிப்போன தயாரிப்பாளர்.... அப்படி என்னதான் கேட்டாரு?
உலகநாயகன் கமலும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் நினைத்தாலே இனிக்கும், மூன்று முடிச்சு, 16 வயதினிலே, இளமை ஊஞ்சலாடுகிறது, அவர்கள் என பல படங்களில் இணைந்து நடித்து விட்டனர். ஒரு காலகட்டத்தில் இருவரும் தனித்தனியாக நடித்தால் தான் லாபம். அதனால் அப்படியே நாம் நடிக்கலாம் என கமல் ரஜினியிடம் சொல்ல இருவரும் தனித்தனியாக நடிக்க ஆரம்பித்தனர்.
தற்போது ஒரு படத்திலாவது மீண்டும் இணைந்து நடிக்க மாட்டார்களா என்ற ஏக்கம் ரசிகர்கள் எல்லாருக்கும் உண்டு. இதற்கு பிரபல தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் என்ன பதில் சொல்லி இருக்கிறார்.
எனக்குத் தெரிஞ்சி கமலும், ரஜினியும் நல்ல நண்பர்கள். அவங்க ரெண்டு பேருக்குள்ளயும் போட்டி இருக்கும். பொறாமை இருக்காது. கமல் கார்ல போயிக்கிட்டு இருந்தார்னா ஸ்டூடியோல யாரு இருக்கான்னு கேட்பாரு. ரஜினி தான்னு சொன்னா உடனே காரை நிப்பாட்டிட்டு வந்து பார்க்க வருவாரு. அந்த அளவுக்கு நல்ல நண்பர்கள். ரெண்டு பேரும் இனி சேர்ந்து நடிக்க வேண்டாம்னு கமல் தான் சொன்னாரு.
மத்தபடி போட்டி பொறாமைங்கறது எப்ப இருந்தோ பியூ சின்னப்பா காலத்துலயோ, தியாகராஜ பாகவதர் காலத்திலயோ, எம்ஜிஆர் சிவாஜி காலத்திலயோ, என்டிராமராவ், நாகேஸ்வரராவ் காலத்திலயோ, கன்னடத்துல ராஜ்குமார் சோலோ அவரை அடிச்சிக்கறதுக்கு ஆளே கிடையாது. ஒன்மேன் ஆர்மி.
அவரைத் தவிர எல்லாருமே நாகேஸ்வரராவ், ராமராவ் ரெண்டு பேருமே எங்க இதுல ஆக்ட் பண்ணிருக்காங்க. ரெண்டு பேருக்குள்ளேயுமே போட்டி உண்டு. பொறாமை உண்டு. எல்லாம் உண்டு.
கமல் சொன்னாரு. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணனும்னு. இப்ப ரெண்டு பேரையும் வச்சி படம் எடுத்தா என் ஸ்டூடியோவை வித்து தான் எடுக்கணும்னேன். இவங்களுக்கு சம்பளத்தைக் கொடுத்து எடுக்கறதுல. ரெண்டு பேரும் நல்ல கோ ஆப்ரேஷன். பட் ரெண்டு பேரையும் வச்சி எடுக்க முடியாது. ரொம்ப கஷ்டம்.