இவர விட்டா இப்போ யாரு? அஜித்தின் அடுத்த வில்லன் இந்த நடிகர் தானா? மாஸா இருக்குமே…

by Akhilan |
இவர விட்டா இப்போ யாரு? அஜித்தின் அடுத்த வில்லன் இந்த நடிகர் தானா? மாஸா இருக்குமே…
X

Ajithkumar: விடாமுயற்சி படத்தில் பரபரப்பாக நடித்து வரும் அஜித்தின் அடுத்த பட அப்டேட் வரிசையாக றெக்கை கட்டி பறந்து வருகிறது. அந்த வகையில் அடுத்த படம் குறித்த மாஸ் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்களே செம ஹேப்பியாகி விட்டனராம்.

மகிழ் திருமேனி படத்தினை முடித்துவிட்டு அஜித் உடனே அடுத்த படத்தில் இணைகிறார். அப்படத்தினை மார்க் ஆண்டனி என்னும் ஹிட் படத்தினை கொடுத்த ஆதிக் ரவிசந்திரன் இயக்குகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தினை தயாரிக்க இருக்கிறது. இப்படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்ததாம்.

இதையும் படிங்க: எதுவோ தப்பு நடக்க போகுது!… ஒரு மாசத்துக்கு முன்னரே கணித்த இளையராஜா…

ரொம்ப நாளுக்கு பின்னர் அஜித்தின் கேரியரில் மீண்டும் ஒரு காமெடி ஜானரிலே இந்த படம் உருவாகும் எனக் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தினை 3 மாதங்களுக்குள் முடித்து விடுவேன் என்றும் ஆதிக் ரவிசந்திரன் நம்பிக்கை கொடுத்து இருக்கிறாராம். இதனாலே அஜித் உடனே இந்த படத்தில் இணைய இருக்கிறார்.

இப்படத்தில் நாயகியாக தபு தேர்வு செய்யப்பட இருப்பதாகவும் அவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் கசிந்த நிலையில் தற்போது கேஜிஎஃப் ஸ்ரீநிதி ஷெட்டியுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக விவரமறிந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவை ஒப்பந்தம் செய்யவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். கிட்டத்தட்ட நடிப்பில் புது அவதாரம் எடுத்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா மார்க் ஆண்டனி படத்தில் நடிப்பு அரக்கனாகவே இருந்து இருந்தார். அவருக்கு அதற்காக அதே பெயரை படக்குழு டைட்டில்லாகவும் கொடுத்தது.

இதையும் படிங்க: மொத்த வாழ்க்கையிலேயே 1 அல்லது 2 முறை தான்… நிறைய வாய்ப்புகளை பவதாரிணி மிஸ் செய்ய முக்கிய காரணம் இதுவா?

Next Story