மொத்த வாழ்க்கையிலேயே 1 அல்லது 2 முறை தான்… நிறைய வாய்ப்புகளை பவதாரிணி மிஸ் செய்ய முக்கிய காரணம் இதுவா?

Bhavaratharini: இளையராஜாவின் மகள் மட்டுமல்ல பவதாரிணி ஒரு அருமையான பாடகி என்பதை மறுக்கவே முடியாது. அத்தனை அருமையான குரலை வைத்து இருந்தும் அவருக்கு நிறைய வாய்ப்புகள் மிஸ்ஸாக சில காரணங்கள் இருப்பதாக பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி தெரிவித்து இருக்கிறார்.

பாரதி என்ற திரைப்படத்தில் நிற்பதுவே நடப்பதுவே பாடலுக்கு தேசிய விருது வாங்கியவர் பவதாரிணி. அவர் பாடிய பாடல்களை அவ்வளவு எளிதாக கண்டுப்பிடித்து விடலாம். சமீபத்தில் மாநாடு படத்தில் ஒரு பாடலை பாடி இருந்தார். ஆனால் பவதாரிணிக்கு பெரிய அளவில் ரீச் கிடைக்கவே இல்லை.

இதையும் படிங்க: என் அப்பாவும் அஜித் அப்பாவும் அப்பல்லோல இருந்தப்போ.. மனிதம் உள்ள ஆளு சார் அவரு! நெகிழவைத்த பதிவு

இளையராஜாவின் மகள் என்பது பெரிய அங்கீகாரம். ஆனால் அதுவே அவருக்கு நிறைய வாய்ப்புகள் மிஸ்ஸாக காரணமாக இருந்தது. மற்ற இசையமைப்பாளர்கள் அவரை நம் படத்துக்கு அழைத்தால் பாடுவாரா என்ற சந்தேகத்திலே நிறைய வெளி படங்களின் வாய்ப்பு அவருக்கு தட்டி சென்றது. சரி பாடல் இல்லை இசையமைப்பு செய்யலாம் என அவர் யோசித்து சில படங்களுக்கு மியூசிக் செய்ய அதுவும் சரியாக அமையாமல் போனது.

இப்படி அவர்களே முடிவு செய்துக்கொண்டு சில வாய்ப்புகளை பவதாரிணிக்கு கொடுக்கவில்லை. ஆனால் அவருக்கு இருந்த ஒரு பயம் கூட அவர் பாடகி கேரியர் உச்சம் அடையாமல் போனதற்கு காரணமாக சொல்லப்பட்டு இருக்கிறது. அதாவது பவதாரிணிக்கு ப்ளைட் போபியாவாம்.

அதாவது விமானத்தில் பயணம் செய்வது மிகப்பெரிய அச்சத்தினை ஏற்படுத்தும். இதனாலே பவதாரிணி அவர் வாழ்க்கையிலே இதுவரை 1 அல்லது 2 முறை மட்டுமே விமானத்தில் பயணம் செய்து இருக்காராம். இதனால் தான் அவர் தன்னுடைய தம்பி மியூசிக்கில் கூட நிறைய பாடல்களை பாடாமல் இருந்தாராம். ஆனால் அவரை கடைசியில் உயிர் காக்க அந்த விமானத்தில் கூட்டிக்கொண்டு போக வேண்டிய நிலை உருவாகி விட்டதாக பிஸ்மி தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: எதுவோ தப்பு நடக்க போகுது!… ஒரு மாசத்துக்கு முன்னரே கணித்த இளையராஜா…

 

Related Articles

Next Story