விஜயுடன் நடிக்க மறுத்த 3 டாப் நடிகர்கள்!.. கடைசியாக நடித்த அந்த நடிகர்!.. இவ்வளவு நடந்திருக்கா!..

பொதுவாக ஒரு வளர்ந்துவிட்ட ஹீரோ தனியாக நடிக்கவே ஆசைப்படுவார். ஏனெனில், அந்த படத்தின் எல்லா சண்டை காட்சிகளும், பாடல்களும் தனக்கு மட்டுமே அமைய வேண்டும் என நினைப்பார்கள். அதோடு, வெற்றியை யாரோடும் பங்கு போட்டுக்கொள்ள பெரும்பாலான ஹீரோக்கள் விரும்பமாட்டார்கள், கமலும், ரஜினியும் தொடர்ந்து பல வருடங்களாக நடிக்காமல் இருப்பதற்கும் அதுதான் காரணம். மேலும், இன்னொரு நடிகருடன் சேர்ந்து நடிக்கும்போது தனது ரசிகர்களை திருப்திபடுத்தும்படி காட்சிகள் இருக்குமா?. அல்லது அந்த நடிகருக்கு மட்டுமே முக்கியத்துவம் இருக்குமா? என யோசிப்பார்கள். […]

Update: 2024-06-12 12:00 GMT

Vijay

பொதுவாக ஒரு வளர்ந்துவிட்ட ஹீரோ தனியாக நடிக்கவே ஆசைப்படுவார். ஏனெனில், அந்த படத்தின் எல்லா சண்டை காட்சிகளும், பாடல்களும் தனக்கு மட்டுமே அமைய வேண்டும் என நினைப்பார்கள். அதோடு, வெற்றியை யாரோடும் பங்கு போட்டுக்கொள்ள பெரும்பாலான ஹீரோக்கள் விரும்பமாட்டார்கள், கமலும், ரஜினியும் தொடர்ந்து பல வருடங்களாக நடிக்காமல் இருப்பதற்கும் அதுதான் காரணம்.

மேலும், இன்னொரு நடிகருடன் சேர்ந்து நடிக்கும்போது தனது ரசிகர்களை திருப்திபடுத்தும்படி காட்சிகள் இருக்குமா?. அல்லது அந்த நடிகருக்கு மட்டுமே முக்கியத்துவம் இருக்குமா? என யோசிப்பார்கள். இதனால்தான் பெரிய நடிகர்கள் இணைந்து நடிப்பது தமிழ் சினிமாவில் மிகவும் குறைவாக இருக்கிறது.

இதையும் படிங்க: தளபதி 69 படம் டிராப்பா?!.. கோட் முடிஞ்சவுடனே நேரா அரசியலா?!.. என்னதாம்பா நடக்குது!..

இயக்குனர் பாலா கேட்டுக்கொண்டதால் பிதாமகன் படத்தில் சூர்யாவுடன் நடித்தார் விக்ரம். அதேபோல், மணிரத்னம் இயக்குனர் என்பதால் கார்த்தியுடன் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தார். வேறு நடிகருடன் அவர் நடிக்கவில்லை. ஆனால், இதே விக்ரம் சினிமாவில் சரியான வாய்ப்பு இல்லாத காலத்தில் அஜித்துடன் உல்லாசம் படத்தில் நடித்தார்.

விஜய்க்கும், அஜித்துக்கும் இடையேயான போட்டி என்பது பல வருடங்களாக தொடர்ந்து வருகிறது. வளரும் போது இருவரும் ராஜாவின் பார்வையிலே படத்தில் நடித்தனர். அதன்பின் வஸந்த் இயக்கத்தில் உருவான நேருக்கு பேர் படத்தில் விஜயுடன் இணைந்து அஜித் நடித்தார். 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்த நிலையில் சில காரணங்களால் அப்படத்திலிருந்து அஜித் விலகினார்.

Ajith, Vijay in Nerukku Ner

அதன்பின் அந்த வேடத்தில் நடிக்க பிரசாந்தை கேட்டார்கள். ஆனால், ஜீன்ஸ் படத்தில் நடித்து கொண்டிருந்ததால் அவர் நடிக்க மறுத்துவிட்டார். அடுத்து அப்போது நடிகராக பிரபலமாகி வந்த பிரபுதேவாவிடமும் கேட்டார்கள். இன்னொரு நடிகரின் படத்தில் நான் நடிக்க மாட்டேன் என அவரும் மறுத்துவிட்டார்.

அதன்பின்னர்தான் சிவக்குமாரின் மகன் சூர்யாவை அந்த வேஷத்தில் நடிக்க வைத்தார் வஸந்த். இதுதான் சூர்யா அறிமுகமான முதல் படம். விஜயுடன் நடிக்க மறுத்த பிரசாந்த் மற்றும் பிரபுதேவா ஆகிய இரண்டு பேரும் இப்போது அதே விஜயுடன் கோட் படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News