நான் ஒரு மனநோயாளி! எப்படிப்பட்டவன் தெரியுமா நான்? மாரிமுத்துவின் பேச்சைக் கேட்டு ஆடிப்போன நிருபர்

Actor Marimuthu: சமீபத்தில் திரையுலகை மீளாத்துயரில் விட்டுசென்றார் நடிகர் மாரிமுத்து. எதிர் நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக தன் முரட்டுக் குணத்தால் ரசிகர்களையும் சரி எதிர் நீச்சல் குடும்பத்தையும் சரி பந்தாடி வந்து கொண்டிருந்தார். பெண்களை தன் அடக்குமுறையால் அடக்கி ஆள வேண்டும் என்ற கதாபாத்திரத்தில் தத்ரூபமாக நடித்து தன் திறமையை காட்டினார் மாரிமுத்து. இதற்கு முன் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் இந்த எதிர் நீச்சல் சீரியல்தான் உலகறிய வைத்தது. உலகமெங்கிலும் உள்ள சன் டிவி ரசிகர்கள் […]

By :  Rohini
Update: 2023-09-15 20:00 GMT

maari

Actor Marimuthu: சமீபத்தில் திரையுலகை மீளாத்துயரில் விட்டுசென்றார் நடிகர் மாரிமுத்து. எதிர் நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக தன் முரட்டுக் குணத்தால் ரசிகர்களையும் சரி எதிர் நீச்சல் குடும்பத்தையும் சரி பந்தாடி வந்து கொண்டிருந்தார். பெண்களை தன் அடக்குமுறையால் அடக்கி ஆள வேண்டும் என்ற கதாபாத்திரத்தில் தத்ரூபமாக நடித்து தன் திறமையை காட்டினார் மாரிமுத்து.

இதற்கு முன் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் இந்த எதிர் நீச்சல் சீரியல்தான் உலகறிய வைத்தது. உலகமெங்கிலும் உள்ள சன் டிவி ரசிகர்கள் மாரிமுத்துவை கொண்டாடி வந்தனர். அதுவரை சீரியலே பார்க்காதவர்கள் மாரிமுத்துவுக்காக சீரியலை பார்க்க ஆரம்பித்தார்கள்.

இதையும் படிங்க: வேண்டும்..வேண்டும்…விஜய் படத்துக்கு வேண்டும்… எக்ஸில் போர்கொடி தூக்கிய தளபதி ரசிகர்கள்!… ஓவரா இல்ல!

ஒரு மாதிரியான ரஃப் கதாபாத்திரம் மக்களுக்கு மிகவும் பிடித்துப் போக மாரிமுத்துவின் பக்கம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஈர்த்தது. இந்த நிலையில் மாரிமுத்து கொடுத்த பழைய பேட்டிகள் எல்லாம் இப்போது வைரலாகி வருகின்றது. அந்த வகையில் அவர் ஒரு சமயம் அவரை பற்றி மிக வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

இப்படியும் ஒரு மனிதன் வெளிப்படையாக இருக்க முடியுமா? என்ற ஆச்சரியத்தை வரவழைத்திருக்கிறது. அதாவது மாரிமுத்து சாமி கும்பிடமாட்டாராம். கோயிலுக்கே போகமாட்டாராம். ஜாதகம் பார்க்க மாட்டாராம். கார், பைக் என எது வாங்கினாலும் எந்த நம்பர் கிடைத்தாலும் ஓகே என நியுமராலஜி பார்க்காமல் தான் வாங்குவாராம்.

இதையும் படிங்கள்: தன் மகளுக்கு நோ சொன்ன ராதிகா… வரலட்சுமிக்கு மட்டும் தாராளம் காட்டிய அதிசயம்.. அப்படி என்ன சேதி?

பயங்கரமாக கோபப்படுவாராம். அவர் அணிந்திருந்த சட்டையில் சிறியதாக நூல் தொங்கிக் கொண்டிருந்தாலும் வீட்டிற்கு போய் அதை கட் பண்ணி எடுத்தால்தான் அவருக்கு உறக்கமே வருமாம். ரொம்ப பர்ஃபக்‌ஷன் பார்ப்பாராம். ஒரு வித நோயாளி நான் என்றும் எது வாங்கினாலும் விலையுயர்ந்ததாக பார்த்துதான் வாங்குவேன் என்றும்

ஒரு செருப்பு வாங்கினாலும் விலையுயர்ந்ததாகத்தான் பார்த்து வாங்குவேன் , அப்படி இல்லையென்றால் வெறுங்காலுடனாவது நடந்து விடுவேன் என்றும் ஒரு மாதிரியான லூசு பய நான் என அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். அதை கேட்டதும் நிருபருக்கு வெடவெடத்து விட்டது.

இதையும் படிங்க: ஜன்னல் வச்சி மொத்த அழகையும் காட்டும் வாணி போஜன்!. சொக்கிப்போன ரசிகர்கள்…

Tags:    

Similar News