ராயா காட்டிலேயே மிக ஆபத்தான மிருகம் எதுன்னு தெரியுமா..? மாஸாக வெளியான 'ராயன்' பட டிரைலர்..!

நடிகர் தனுஷ் தானே இயக்கி நடித்திருக்கும் 50-வது திரைப்படம் ராயன். இந்த திரைப்படம் வருகிற ஜூலை 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், தனுஷ், சந்திப் கிஷன், அபர்ணா முரளி, துஷாரா, எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ். செல்வராகவன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகி இருக்கின்றது. இந்த திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரித்திருக்கின்றது. மேலும் ஏ ஆர் […]

Update: 2024-07-17 10:03 GMT

நடிகர் தனுஷ் தானே இயக்கி நடித்திருக்கும் 50-வது திரைப்படம் ராயன். இந்த திரைப்படம் வருகிற ஜூலை 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், தனுஷ், சந்திப் கிஷன், அபர்ணா முரளி, துஷாரா, எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ். செல்வராகவன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

முழுக்க முழுக்க ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகி இருக்கின்றது. இந்த திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரித்திருக்கின்றது. மேலும் ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கின்றார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

தமிழில் பிரபல நடிகராக இருந்த தனுஷ் தற்போது அடுத்தடுத்து படங்களை இயக்கி வருகின்றார். பவர் பாண்டி என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இவர் தற்போது ராயன் திரைப்படத்தை இயக்கி முடித்து இருக்கின்றார். இடைத்தொடர்ந்து நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகின்றார்.

அதுமட்டுமில்லாமல் ஏகப்பட்ட திரைப்படங்களையும் தன் கைவசம் வைத்திருக்கும் இவர் தொடர்ந்து இயக்கத்திலும் கவனம் செலுத்தி வருகின்றார். இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இருக்கின்றது இந்த ட்ரெய்லரில் "ராயா காட்டிலேயே ஆபத்தான மிருகம் எது தெரியுமா? என்று செல்வவராகவன் கேள்வி எழுப்புவதுடன் தொடங்கும் ட்ரைலர் சிங்கம் தான் என்கின்றார் தனுஷ்.

ஆபத்தான மிருகம் ஓநாய். ஒத்தைக்கு ஒத்த நின்னா சிங்கம் ஓநாயை அடிச்சிடும். ஆனா ஓநாய் ரொம்ப தந்திரவாதி. புத்திசாலித்தனமா தன்னோட கூட்டத்தை சேர்த்து சிங்கத்தை அடிச்சு கொன்னுடும்" என்று கூறுகிறார். மேலும் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்ஜே சூர்யா நடித்திருக்கின்றார்.

பிரகாஷ்ராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதற்காக தெரிகின்றது. மொட்டை அடித்துக் கொண்டு வரும் தனுஷின் தோற்றம் பார்க்கவே வித்தியாசமாக இருக்கின்றது. அழுத்தமான ஒரு ஆக்சன் படமாக இந்த திரைப்படம் இருக்கும் என்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது.

Full View

Tags:    

Similar News