கரை சேருவாரா ஜெயம்ரவி… காதலிக்க நேரமில்லை Trailerல் இத நோட் பண்ணீங்களா?

By :  Akhilan
Update: 2025-01-08 10:47 GMT

Kadhalikka neramillai

KadhalikkaNeramillai: கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் காதலிக்க நேரமில்லை திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது. நேற்று ஆடியோ ரிலீஸ் நடந்து இருக்கும் நிலையில் டிரைலரும் வெளியாகி இருக்கிறது.

காதலிக்க நேரமில்லை: டிரைலர் வெளியிடப்பட்டு 20 மணிநேரம் கடந்து இருக்கும் நிலையில் 2.6 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது. யூடியூப்பிலும் டிரெண்டிங்கில் நம்பர் ஒன்னாக இருக்கிறது. பல வருடங்கள் கழித்து மீண்டும் லவ் ஜானரில் ஜெயம் ரவி நடிப்பதால் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருப்பதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தி உள்ளது. அடிதடி சண்டை காட்சிகளுக்கு மத்தியில் இப்படி ஒரு படம் வந்து கோலிவுட்டில் பல வருடங்கள் ஆகிவிட்டது என்றே கூறலாம்.

டிரைலர்: பாடகர் மனோ மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் நித்யா மேனனின் பெற்றோராக நடித்துள்ளனர். ஆரம்பமே தான் கர்ப்பமாக இருப்பதாக நித்யா மேனன் சொல்வதுடன் ஆரம்பிக்கிறது டிரைலர். ஜெயம் ரவி கவலையில்லாத இளைஞராக தன்னுடைய நண்பர் யோகி பாபு மற்றும் வினயுடன் விளையாடி கொண்டு இருக்கிறார்.

நித்யா மேனனின் காதலராக வரும் கரண் வினயாக இருக்கலாம். அதுமட்டுமல்லாமல், சித்தாக வரும் ஜெயம்ரவியிடம் பழகி நித்யா மேனன் கர்ப்பமாகி இருக்கலாம். ஆனால் ஜெயம் ரவிக்கு ஏற்கனவே ஒரு காதலி இருந்து அவர் பிரேக்கப் ஆகி சென்று வந்து மீண்டும் முயற்சி செய்யலாம் என்கிறார்.

கருவுடன் நித்யா மேனன் ஒரு பக்கம், பழைய காதலி ஒரு பக்கம் என குழப்பத்தில் ஜெயம் ரவி இருக்கிறார். ஸ்ரேயாவாக இருக்கும் நித்யா மேனனை ஜெயம் ரவி காதலிப்பதை ஒருதலை காதலி புரிய வைக்கிறார். பின்னர் இவர்கள் எப்படி ஜோடி சேருவார்கள் என்பது தான் கதையாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News