விஜய்யின் அரசியல் கட்சி!.. ஒரே வார்த்தையில் சோலியை முடித்த வடிவேலு.. இப்படி சொல்லிட்டாரே!..

by Saranya M |   ( Updated:2024-02-06 17:14:27  )
விஜய்யின் அரசியல் கட்சி!.. ஒரே வார்த்தையில் சோலியை முடித்த வடிவேலு.. இப்படி சொல்லிட்டாரே!..
X

விஜயகாந்தின் மறைவுக்கு இதுவரை ஒரு இரங்கல் கூட தெரிவிக்காத வடிவேலு கலைஞர் 100 விழாவில் மட்டும் வந்து கலந்துக் கொண்டார். அதே போல இளையராஜாவின் மகள் பவதாரிணியின் மறைவுக்கு ஆடியோ மூலம் மட்டும் இரங்கல் தெரிவித்தார்.

இந்நிலையில், தனது அம்மா உயிரிழந்து ஒரு வருடம் ஆன நிலையில், ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்று திதி கொடுத்து, மோட்ச தீபத்தை நீரில் விட்டு ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்து வந்த வடிவேலுவை சந்தித்த பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ராமேஸ்வரத்திற்கு மோட்ச தீபம் செலுத்த தான் வந்தேன் எனக் கூறினார்.

இதையும் படிங்க: மீண்டும் தம்பியின் தலையை தடவ போகும் அண்ணன்!.. அந்த படத்தை இந்த வருஷம் எடுக்கப் போறாராம்!..

அதன் பின்னர், நடிகர் விஜய் புதிதாக தமிழக வெற்றி கழகம் என அரசியல் கட்சி தொடங்கியிருக்காரே அதுபற்றி உங்கள் கருத்து என்ன? என்கிற கேள்வியை பத்திரிகையாளர்கள் எழுப்பினர்.

அதற்கு, “அவ்வளவுதான்” என நக்கலாக பதில் அளித்து கிளம்புங்க என பத்திரிகையாளர்களை விரட்டி விட்டுள்ளார். வடிவேலு “அவ்வளவுதான்” என்பதை வித்தியாசமான தொனியில் சொன்னதை வைத்தே அவர் விஜய் கட்சி அவ்வளவுதான் என்று சொல்லி விட்டார் என நெட்டிசன்கள் சர்ச்சையை கிளப்ப ஆரம்பித்து விட்டனர்.

இதையும் படிங்க: எந்த ரசிகர்களும் இல்லாத ஏரியாவில் தான் நடக்கணும்!… லைகாவை வச்சு செய்யும் அஜித்… சும்மா இருந்து இருக்கலாமோ?

சச்சின், வசீகரா, காவலன், வில்லு, மதுர, சுறா, கடைசியாக மெர்சல் வரை பல படங்களில் விஜய்யுடன் வடிவேலு இணைந்து நடித்து வந்த நிலையில், இடையே இருவருக்கும் முட்டிக் கொண்டதாகவும் பேச்சுக்கள் அடிபட்டன.

திமுகவின் தீவிர ஆதரவாளரனா வடிவேலுவிடம் விஜய்யின் அரசியல் வருகை பற்றி கேட்டால், அவ்வளவுதான்னு தான் சொல்வார் என விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Next Story