ஏதே வலிமை வசூல் 76 கோடியா.?! கொஞ்சம் நம்புற மாறி சொல்லுங்க போனி மாம்ஸ்.! கதறும் ரசிகர்கள்.!

வலிமை திரைப்படம் நேற்று இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மொத்தமாக ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியானது. இதுவரை வெளியான அஜித் படங்களில் இது தான் அவருக்கு அதிக பட்ஜெட் திரைப்படம்.  முதன் முறையாக அஜித் திரைப்படம் ஐந்து மொழிகளில் வெளியானது. பைக் ரேசிங், ஆக்ஷன், சென்டிமெண்ட் கலந்த திரைப்படமாக வலிமை வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு பலதரப்பட்ட மக்களிடம் இருந்து பலவிதமான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. இரண்டாம் பாதி சென்டிமெண்ட் காட்சிகள் […]

By :  Manikandan
Update: 2022-02-25 01:53 GMT

வலிமை திரைப்படம் நேற்று இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மொத்தமாக ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியானது. இதுவரை வெளியான அஜித் படங்களில் இது தான் அவருக்கு அதிக பட்ஜெட் திரைப்படம். முதன் முறையாக அஜித் திரைப்படம் ஐந்து மொழிகளில் வெளியானது.

பைக் ரேசிங், ஆக்ஷன், சென்டிமெண்ட் கலந்த திரைப்படமாக வலிமை வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு பலதரப்பட்ட மக்களிடம் இருந்து பலவிதமான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. இரண்டாம் பாதி சென்டிமெண்ட் காட்சிகள் அதிகமாக இருக்கிறது என்று விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

இதையும் படியுங்களேன் - ஒரே நாளில் அண்ணாத்த, 2.O-வை அடிச்சு தூக்கி முதலிடம் பிடித்த வலிமை.! எத்தனை கோடிகள் தெரியுமா.?!

ஏற்கனவே, இப்படம் முதல் நாள் தமிழகத்தில் மட்டும் 36.17 கோடி வசூல் செய்து உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுவே அதிகபட்ச முதல் நாள் தமிழக வசூலான கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தற்போது உலக அளவில் வலிமை திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் தற்போது வெளியாகியுள்ளது அதன்படி முதல் நாளில் மட்டும் உலகம் முழுக்க திரைப்படம் 76 கோடி வசூல் சாதனை செய்துள்ளது இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் ரீடிவீட் செய்து உறுதி செய்துள்ளார்.

Tags:    

Similar News