அம்மா இறந்த அப்போ.. யார் என்ன சொன்னாலும் பரவாயில்லைனு.. அப்படி செய்தேன்- வனிதா
நடிகை வனிதா விஜயகுமார், பல ஆண்டுகள் கழித்து பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அதற்கு முன்னர் சில படங்களில் நடித்திருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தார். அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வரும் வனிதா, சமீபத்திய பேட்டி ஒன்றில் என் தாய் மஞ்சுளா இறந்தபோது, நான் பட்டு புடவை கட்டிக்கொண்டு, பிங்க் கலர் லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு சென்றேன் என தெரிவித்துள்ளார். நடிகை வனிதா விஜயகுமார், ஏற்கனவே 2 முறை திருமணமாகி, விவாகரத்து […]
நடிகை வனிதா விஜயகுமார், பல ஆண்டுகள் கழித்து பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அதற்கு முன்னர் சில படங்களில் நடித்திருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தார்.
அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வரும் வனிதா, சமீபத்திய பேட்டி ஒன்றில் என் தாய் மஞ்சுளா இறந்தபோது, நான் பட்டு புடவை கட்டிக்கொண்டு, பிங்க் கலர் லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு சென்றேன் என தெரிவித்துள்ளார். நடிகை வனிதா விஜயகுமார், ஏற்கனவே 2 முறை திருமணமாகி, விவாகரத்து பெற்றுவிட்டார்.
அதன் பின்னர் டான்ஸ் மாஸ்டர் ராப்ர்ட் என்பவரை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்துக்கொள்ள போவதாகவும் அறிவித்தனர். ஆனால் அந்த திருமணம் நடைபெறவில்லை. அதற்கடுத்து, கடந்த 2020ம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இதையும் படிங்க- விஜய் நினைக்கிறதே வேற!.. இதுக்கு பின்னாடி இருப்பது அந்த நடிகராம்!.. அட யோசிக்கவே இல்லையே!…
திருமணம் முடிந்து ஹனிமூன் சென்ற அவர்கள், அங்கேயே சண்டை போட்டு பிரிந்துவிட்டனர். அதன் பிறகு தற்போது அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் வனிதா. தமிழ் மட்டுமின்றி, தெலுங்கிலும் நடிக்க தொடங்கிவிட்டார். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், தன்னுடைய தாய் நடிகை மஞ்சுளாவிற்கு பெண்கள் எப்போதுமே லிப்ஸ்டிக் போட்டிருக்க வேண்டும்.
அவரும் எப்போதுமே, ஒரு டார்க் ரெட் கலர் லிப்ஸ்டிக் போட்டிருப்பார். அது தான் பெண்களுக்கு அழகு என்று கூறுவார். சும்மா வீட்டில் இருக்கும் போது கூட லிப்ஸ்டிக் போட்டுக்கொள்ள சொல்வார். பெண்கள் எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்.
அதனால் தான் அவர் இறந்த போது, நான் என் மகள்களை கூட்டிக்கொண்டு அவரை பார்க்க சென்ற போது, பட்டுப் புடவை கட்டிக்கொண்டு, பிங்க் லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு சென்றேன். யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை என்று அப்படி சென்றேன். அவர் கடைசியாக என்னை பார்க்கும் போது, நான் அழகாக இருக்க வேண்டும் என்று அப்படி சென்றேன் என வனிதா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க- கமலுடன் நடிக்க மறுத்த ரகுவரன்!.. இந்த சின்ன விஷயம்தான் காரணமா?.. அட போங்கப்பா!…