இந்த கலர் பஞ்சுமிட்டாய்க்கு இன்னுமா தடை விதிக்கல!.. வனிதா விஜயகுமாரை கலாய்க்கும் ஃபேன்ஸ்!..
குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. அதற்காக சிங்கிச்சான் சிங்கிச்சான் பிங்க் கலர் சிங்கிச்சான் என்பது போல பஞ்சுமிட்டாய் கலர் உடையை அணிந்துக் கொண்டு செஃப் தொப்பியெல்லாம் பிங்க் கலரில் போட்டுக் கொண்டு நடிகை வனிதா விஜயகுமார் புரமோ வீடியோ ஒன்றில் பேசியுள்ளார்.
அந்த உடையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ஷேர் செய்துள்ள நிலையில், இணையத்தில் அந்த போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார் தனது மகள் ஜோவிகாவுடன் தனித்து வாழ்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: சியான் விக்ரமுக்கு ஜோடியான வேட்டையன் பட நடிகை!.. அடுத்தடுத்து பெரிய படங்களை அசால்ட்டா பிடிக்கிறாரே!
திருமண உறவில் அவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில், மகளை ஹீரோயினாக்கி விட வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் கடுமையாக உழைத்து வருகிறார். விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரச்சனையை கிளப்பி வெளியேறி ஜீ தமிழ் டிவிக்கு எல்லாம் சென்றாலும், மீண்டும் பிரச்சனைகளை பேசி சரி செய்து விட்டு விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களில் களமிறங்கி வருகிறார். குக் வித் கோமாளி சீசன் 1 டைட்டில் வின்னரான வனிதா விஜயகுமார் தற்போது புதிய சீசனை அறிமுகப்படுத்தும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
சீசன் 5ல் இவரும் ஒரு நடுவராக வரப் போகிறாரா? அல்லது இவரது பங்கு இருக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ரோஸ் கலர் பஞ்சுமிட்டாயை தடை செஞ்சுட்டாங்களே ஆனால், ஆளுயர பஞ்சுமிட்டாய் போல இருக்கீங்களே அக்கா என வனிதா விஜயகுமாரை ஜாலியாக ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பாக்கவே கூச்சமா இருக்கு!.. முழு அழகையும் மூடாமல் காட்டும் பிரியாமணி!. வைரல் போட்டோஸ்!..
இந்த கவுன் உடை கச்சிதமாக இருக்கு இப்பவும் நீங்க ஹீரோயின் மெட்டீரியல் தான் என ஏகப்பட்ட ரசிகர்கள் ஹார்ட்டின்களை விட்டு வருகின்றனர். குக் வித் கோமாளி சீசன் நிகழ்ச்சியில் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவர்களாக உள்ள நிலையில், கோமாளிகளாக புகழ், ராமர், மணிமேகலை, குரேஷி உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
விஜய் டிவியில் பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி சீசன் 5 விரைவில் தொடங்கப் போவதால் ரசிகர்கள் செம என்டர்டெயின்மென்ட்டுக்கு காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: ஹிப் ஹாப் ஆதிக்கே டஃப் கொடுப்பாரு போல!.. சூப்பர் ஹீரோவான பிரபுதேவா.. அந்த மின்னலை விட மாட்றாங்களே!..