பிரதீப்கிட்ட இத பத்தி பேசுனேன்! ஆனா அவன் என்ன சொன்னான் தெரியுமா? மூஞ்சி பஞ்சர் ஆகியும் அடங்காத வனிதா
Vanitha about Pradeep: கடந்த சில தினங்களுக்கு முன்பு வனிதா விஜயகுமாரை ஒரு மர்ம நபர் தாக்கிய செய்தி இணையத்தில் வைரலானது. அவர் பிக்பாஸ் நிகழ்ச்சி ரிவியூவை முடித்துவிட்டு சாப்பிடுவதற்காக தனது காரை பார்க் செய்ய சென்றிருக்கிறார்.
அப்போது ஒரு முகமூடி அணிந்த ஒரு மர்ம நபர் வனிதாவிடம் ‘ரெட் கார்டா கொடுக்கிறீங்க’ என சொல்லிக் கொண்டே மெண்டல் மாதிரி சிரித்துக் கொண்டு தன்னை அடித்ததாகவும் வனிதா விஜயகுமார் தனது புகைப்படத்தை இணையதள பக்கத்தில் பகிர்ந்தார்.
இதையும் படிங்க: ரைட்டு அடுத்த பிரச்னை தொடங்கியாச்சு… லியோ பட தயாரிப்பாளர் மீது கடுப்பில் இருக்கும் லோகேஷ்… சேதி என்ன தெரியுமா?
உடனே இந்த செய்தி காட்டுத்தீ போல பரவியது. அதுமட்டுமில்லாமல் அந்த மர்ம நபர் ரெட் கார்டை பற்றி பேசி அடித்தது ஒரு வேளை பிரதீப்பின் ஆதரவாளராகக் கூட இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது. ஆனால் வனிதா நேரடியாக இதை பிரதீப் தான் செய்தார் என்று சொல்லவில்லை.
இதை பற்றி வனிதா பிரதீப்பிடம் போனில் மெசேஜ் மூலம் சாட் செய்தாராம். அதில் ‘பிரதீப் நான் எந்த நேரத்தில் உன்னை நேரடியாக புகார் கூறவில்லை. வந்தவர் ஒரு வேளை உனக்கு ஆதரவாளராகக் கூட இருக்கலாம் என்றுதான் சொல்லியிருந்தேன்.’
இதையும் படிங்க: பாலச்சந்தரையே ‘வா.. போ’ என பேசிய காமெடி நடிகர்!.. ஆனாலும் ரொம்ப தைரியம்தான்!..
‘அதையும் மீறி நான் சொன்னதும் உன்னை புண்படுத்தியிருந்தால் சாரி ’ என்று மெசேஜில் வனிதா கூறினாராம். அதற்கு பிரதீப் ‘பரவாயில்லை வனிதா’ என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் அவர் மகளான ஜோவிகாவை பற்றி வனிதாவிடம் பேசினாராம்.
அதாவது ஜோவிகா சமீபகாலமாக நன்றாக விளையாடிக் கொண்டு வருகிறார் என்றும் நீங்கள் ஒன்றும் கவலை படாதீர்கள் . அவள் கண்டிப்பாக ஜெயிப்பாள் என்றும் பிரதீப் கூறினார். இதற்கு பதிலடியாக வனிதா ‘ நான் என்னை தாக்கியதை பற்றி அவனிடம் கூறினேன். ஆனால் அவன் ஏதோ என் மகள் விளையாட்டில் நான் சந்தேகப்படுவது போலயும் அவள் ஜெயிப்பாள் என்றும் என்னிடம் எப்படி கூற முடியும்?’ என கேட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: எல்லாம் வதந்தி! எதையும் நம்பாதீங்க – அவரே சொல்லிட்டாரு! ஏகே 63 பற்றிய புதிய அப்டேட்
மகாள் ஜெயிப்பாள் என்று சொன்னதில் அப்படி என்ன தவறு இருக்கிறது என தெரியவில்லை. இதை பிரதீப் சொன்னது வனிதாவை மிகவும் கோபப்படுத்தியிருக்கிறது.