அப்பாவிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு போன விஜய்!.. கடைசியில் எங்கே இருந்தார் தெரியுமா?...
Actor vijay: தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக மாறியிருப்பவர் நடிகர் விஜய். வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் இவரின் சம்பளம் ரூ.200 கோடி என சொல்லப்படுகிறது. அதேபோல், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்து வரும் லியோ படம்தான் ரசிகர்களிடம் பெரிய ஹைப்பை உருவாக்கியுள்ளது.
ஒரு பக்கா கேங்கஸ்டராக உருவாகியுள்ள இந்த படத்தை காண விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். ஏற்கனவே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தானதால் அவர்கள் அப்செட்டில் இருக்கிறார்கள். எனவே, அவர்களை குஷிப்படுத்த படம் தொடர்பான அப்டேட்டுகள் மற்றும் அப்படத்தின் பாடல் என வெளியாகி வருகிறது.
இதையும் படிங்க: விஜய் பட டைட்டிலை உருவாக்கிய ரஜினி மகள்!.. இதுக்கா செல்லங்களா இப்படி அடிச்சிக்கிட்டீங்க!..
விஜய்க்கும் அவரின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே கடந்த பல வருடங்களாகவே சுமூக உறவு இல்லை. அப்பாவிடம் விஜய் பேசுவதும் இல்லை. அதோடு, அவரை பார்ப்பதையும் தவிர்த்து வந்தார். இதை பல பேட்டிகளிலும் எஸ்.ஏ.சியே கூறியும் இருக்கிறார். அதேநேரம், சமீபத்தில் எஸ்.ஏ.சி அறுவை சிகிச்சை செய்துகொண்டபோது விஜய் போய் நேரில் பார்த்து நலம் விசாரித்து இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
டின் ஏஜிலேயே அதாவது மீசை முளைக்க துவங்கும் போதே விஜய்க்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை வந்துவிட்டது. ஆனால், எஸ்.ஏ.சிக்கு அதில் கொஞ்சம் கூட விருப்பமில்லை. அவர் எவ்வளவு எடுத்து சொல்லியும் விஜய் கேட்கவே இல்லை. அடம்பிடித்து கொண்டே இருந்தார். ஆனால், எஸ்.ஏ.சி மனம் மாறவில்லை.
இதையும் படிங்க: தளபதி விஜயை காப்பாற்றி வரும் கவுண்டமணி!.. அவர் மட்டும் இல்லனா!.. விஜயே பகிர்ந்த சீக்ரெட்..
ஒருமுறை இது தொடர்பாக எஸ்.ஏ.சி திட்டியதில் கோபப்பட்ட விஜய் வீட்டை விட்டு வெளியே போய்விட்டாராம். பதறிய எஸ்.ஏ.சி பல இடங்களில் தேடியும் விஜய் கிடைக்கவில்லை. ஒருபக்கம் விஜயின் அம்மா ஷோபாவும் ‘மகன் எங்கோ போய்விட்டான்’ என அழுது கொண்டிருந்தாராம். அப்போதுதான் ஒரு தியேட்டர் அதிபர் எஸ்.ஏ.சந்திரசேகரை அழைத்து ‘உங்கள் மகன் விஜய் இங்கே அண்ணாமலை படத்தை பார்த்துக்கொண்டிருக்கிறார். உடனே வாருங்கள்’ என சொல்ல அங்கே சென்று விஜயை வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார் எஸ்.ஏ.சி.
அதன்பின் விஜயை எஸ்.ஏ.சியே நாளைய தீர்ப்பு படத்தில் கதாநாயகனாக அறிமுகம் செய்து வைத்தார். மேலும், ரசிகன், செந்தூர பாண்டி, தேவா, விஷ்ணு ஆகிய படங்களை இயக்கினார். அதன்பின் விஜய் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்து இப்போது பெரிய ஹீரோவாக வளர்ந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நம்ம நினைச்சத அவன் சொல்லிட்டான்… இதனால் தான் விஜய் கம்முனு இருக்காரா? அடடே!