கோட் படத்தை ஓட்ட விஜய் என்னவெல்லாம் செய்யுறாரு பாருங்க!.. யுவன் சங்கர் ராஜா கொடுத்த அப்டேட்!..
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக கோட் திரைப்படம் உருவாகி வருகிறது. அந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான ’விசில் போடு’ பாடல் ஏதோ சிஎஸ்கே அணிக்காக யுவன் சங்கர் ராஜா போட்டது போல இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. கோட் படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக மாற்ற நடிகர் விஜய் ஏகப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், கோட் படத்துக்காக அவர் செய்துள்ள இன்னொரு தரமான விஷயம் குறித்த அப்டேட்டை நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் […]
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக கோட் திரைப்படம் உருவாகி வருகிறது. அந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான ’விசில் போடு’ பாடல் ஏதோ சிஎஸ்கே அணிக்காக யுவன் சங்கர் ராஜா போட்டது போல இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன.
கோட் படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக மாற்ற நடிகர் விஜய் ஏகப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், கோட் படத்துக்காக அவர் செய்துள்ள இன்னொரு தரமான விஷயம் குறித்த அப்டேட்டை நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் யுவன் சங்கர் ராஜா வெளிப்படையாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நல்லவேளை சன் ரைசர்ஸ் டீம் ஜெயிக்கலை!.. இல்லைன்னா ரஜினிதான் காரணம்னு சொல்லியிருப்பானுங்க!..
விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி மற்றும் பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் கோட் படத்தில் நடித்து வருகின்றனர். அர்ச்சனா கல்பத்தி தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் தேதி ஆசிரியர் தினம் மற்றும் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வெளியாகிறது.
வரும் ஆகஸ்ட் மாதம் பிரம்மாண்டமாக தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கீதை படத்திற்கு பிறகு யுவன் சங்கர் ராஜா விஜய்க்காக இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இதையும் படிங்க: விஜயை வச்சு படம் எடுத்து கடனாளியா போறீங்களா? படத்தை டிராப் செய்த தயாரிப்பாளர்
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யுவன் சங்கர் ராஜாவிடம் கோட் படம் பற்றிய தரமான அப்டேட் ஒன்றை கொடுங்கள் என தொகுப்பாளினி கேட்க விஜய் இந்த படத்தில் விசில் போடு பாடல் மட்டுமல்ல இன்னொரு சூப்பரான பாடலையும் பாடியுள்ளார் என்கிற அப்டேட்டை யுவன் சங்கர் ராஜா கொடுத்துள்ளார்.
பொதுவாகவே விஜய் பாடல் மிகப்பெரிய வெற்றியடையும். விசில் போடு பாடல் ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்த நிலையில், இன்னொரு பாடலையும் நடிகர் விஜய் பாட முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. தளபதி ரசிகர்களுக்கு இந்த அப்டேட் மிகப்பெரிய ட்ரீட் அகவே உள்ளது. வரும் ஜூன் மாதம் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஏகப்பட்ட அப்டேட்கள் வரிசையாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனை பார்த்து சீன் போடும் ஐஸ்வர்யா ராஜேஷ்!.. இந்த படமாவது ஓடணும்னு வயிறாரா வாழ்த்துங்க!