இன்னும் ஓடிடிக்கே வரல.. அதுக்குள்ள நாய் பொழப்பா இருக்கே.. விஜய்க்கு இப்படியொரு பரிதாப நிலைமையா?
புதிய படங்கள் தமிழ் சினிமாவில் வெறும் 4 வாரங்களிலேயே ஓடிடிக்கு வருகிறதே என ஒரு பக்கம் ரசிகர்கள் புலம்பினாலும், 2 வாரத்துக்கு மேல் விஜய் போன்ற பெரிய நடிகர்கள் படங்களை பார்க்கவே ரசிகர்கள் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மையாக உள்ளது.
ஒட்டுமொத்த ரசிகர்களும் முதல் நாளே படத்தை பார்த்து விடும் ஆர்வத்தில் உள்ள நிலையில் தான் முன்னணி நடிகர்கள் குப்பை படங்களாகவே கொடுத்து வருகின்றனர் என்கிற விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.
இதையும் படிங்க: வேறலெவல் கும்தாவா இருக்காரே ஷாலு ஷம்மு!.. ஒரு வாரத்துக்கு தூக்கம் வராதே.. ஓவரா உச்சிக்கொட்டும் ஃபேன்ஸ்!..
லியோ திரைப்படம் இன்னும் ஓடிடியில் வெளியாகாத நிலையில், பல திரையரங்குகளில் 6 நாள் முடிந்த உடனே காத்து வாங்க ஆரம்பித்த நிலையில், 3வது வாரத்தில் ஒட்டுமொத்த சோலியும் முடிந்தாலும், தீபாவளிக்கு வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட படங்கள் சொல்லிக் கொள்ளும் படி இல்லாத நிலையில், லியோ படத்தையாவது மீண்டும் போட்டு ஓட்டலாம் என்கிற முடிவுக்கு வந்துள்ள கமலா சினிமாஸ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கவுதம் மேனன், பிரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன், சாண்டி உள்ளிட்ட பலர் நடித்தும் ஒருத்தருக்கு ஒரு நாள் ஓடினாலும் 30 நாட்களாவது ஓடியிருக்க வேண்டிய லியோ படம் ஊத்தி மூடிய நிலையில், 59 ரூபாய் டிக்கெட்டில் லியோ படத்தை திரையிட திட்டமிட்டுள்ளனர்.
முதல் நாள் 5000 டிக்கெட் என்றாலும் கொடுத்து படம் பார்க்கும் விஜய் ரசிகர்கள் மீண்டும் 59 ரூபாய் கொடுத்து படத்தை பார்த்து ஓட்டுவார்களா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. விஜய்க்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவில் எந்தவொரு நடிகராக இருந்தாலும், இனிமேல் படங்கள் ஒரு வாரத்தை தாண்டினாலே பெரிய விஷயம் என்கிற அளவுக்கு சூழ்நிலை மாற மோசமான இயக்குனர்களை பெரிய நடிகர்கள் உருவாக்கி வருவது தான் என்கின்றனர். இதுல கொடுமை என்னன்ன விஜய் ரசிகர்கள் துப்பாக்கி படம் போடலயான்னு கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 4 நாள்ல ஜப்பான் கதை கந்தல்!.. ஜிகர்தண்டா நிலைமை படுமோசம்.. இதுலாம் தீபாவளி வின்னரா?