Connect with us

Cinema News

4 நாள்ல ஜப்பான் கதை கந்தல்!.. ஜிகர்தண்டா நிலைமை படுமோசம்.. இதுலாம் தீபாவளி வின்னரா?

இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான படங்களின் நிலைமை படுமோசமாக உள்ளதாக செய்யாறு பாலு சமீபத்திய வீடியோவில் பேசியுள்ளார். கடந்த நவம்பர் 10ம் தேதி ஜப்பான் மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

கார்த்தி நடித்த ஜப்பான் படம் கன்றாவியாக உள்ளதாக கடுமையான விமர்சனங்கள் குவிந்த நிலையில், கார்த்தியை நம்பி முதல் நாள் தியேட்டருக்கு சென்ற ரசிகர்கள் எல்லாம் கழுவி கழுவி ஊற்றிய நிலையில், உஷாரான மற்ற ரசிகர்கள் தீபாவளிக்கு கூட ஜப்பான் பக்கம் ஒதுங்க கூடாது என முடிவெடுத்து விட்டனர்.

இதையும் படிங்க: ஃபர்ஸ்ட் மீட்டிங்கில் அட்லியை பங்கமாக கலாய்த்த அஜித்!.. அட ஒரே பப்பி ஷேமா போச்சே!..

படம் வெளியான 4 நாட்களிலேயே பல இடங்களில் 8 பேர் கூட வராத நிலையில், ஷோ கேன்சல் ஆகும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளதாக செய்யாறு பாலு கூறியுள்ளார்.

ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ், தனுஷ் என தொடர்ந்து சினிமா பிரபலங்கள் பில்டப் கொடுத்து பாராட்டும் அளவுக்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் ஒன்றும் பெரிதாக இல்லை என்றும் அதையும் ரசிகர்கள் அதில் ஒன்றுமில்லை என கீழே போட்டு விட்டனர் என்றும் கலாய்த்துள்ளார்.

இதையும் படிங்க:  ரஜினியிடம் மாட்டிக்கொண்டு முழித்த இயக்குனர் மகன்.. சின்ன பையனா இப்படியா மிரட்டுறது!…

மேலும், இன்று மதியம் கூட சென்னையில் உள்ள தேவி கருமாரி தியேட்டரில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பார்த்து விட்டு தான் வந்தேன். மொத்தமாக வெறும் 22 பேர் தான் இருந்தார்கள். இந்த படம் எல்லாம் தீபாவளி வின்னர், பட்டையை கிளப்புது அப்படின்னு எல்லாம் பில்டப் பண்ணாதீங்க ஜப்பான் ரொம்ப மோசம் இது மோசமான படம் அவ்ளோ தான் என அடித்து நொறுக்கி விட்டார் செய்யாறு பாலு.

google news
Continue Reading

More in Cinema News

To Top