ரெண்டு பேருக்கும் ஒரே பாத்ரூம் ! பூவே உனக்காக சீரியலில் இருந்து விலக காரணமே இதுதான் - அசீம் குறித்து பிரீத்தி சொன்ன தகவல்

by Rohini |   ( Updated:2023-09-23 11:49:57  )
poove
X

poove

Poove Unakaga Serial: சன் டிவியில் பிரபலமான சீரியல்களில் பூவே உனக்காக சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் பிக்பாஸ் அசீம், நடிகை பிரீத்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஆனால் இடையிலேயே பிரீத்தி இந்த தொடரை விட்டு விலகினார். பூவரசியாக மக்கள் மனதில் ஆணித்தரமாக பதிந்தவர் பிரீத்தி.

ஆனால் அவர் இந்த சீரியலை விட்டு விலகியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. சீரியல் முற்றுபெற்றதை தொடர்ந்து ஏன் அந்த சீரியலை விட்டு விலகினேன் என்ற காரணத்தை சமீபத்தில் பிரீத்தி கூறினார். ஏற்கனவே அசீமிற்கு முன்பாகவே அருண் என்பவர்தான் சீரியலின் கதாநாயகனாக இருந்திருக்கிறார்.

இதையும் படிங்க: காதல் கல்யாணம் பண்ணாலும் ஏன் டைவர்ஸ் நடக்குது?.. மாநகரம் ஸ்ரீ வாழ்க்கையில இப்படியொரு சோகமா?..

அவர் விலகியதற்கு பின்னாடிதான் அசீம் வந்தாராம். அசீம் வந்த பிறகு தொடரில் ஸ்கிரிப்டையே மாற்றினார்களாம். முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த பூவரசியான பிரீத்தியை வில்லியாக காட்ட ஆரம்பித்திருக்கின்றனர். வில்லியாக இருந்தவரை கதாநாயகியாக காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.

மேலும் நேரத்திற்கு சம்பளம் வராதாம். அடிக்கடி பிரீத்திக்கு உடல் நிலையும் சரியில்லாமல் போனதாம். ஹோட்டல் சாப்பாடு, புரடக்‌ஷன் சாப்பாடு என வெளியில் சாப்பிட்டதால் உடலில் ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட அடிக்கடி மருத்துவமனையில் போய் சிகிச்சை மேற்கொண்டாராம். அதற்கு அனுமதி கேட்டால் கொடுக்கமாட்டார்களாம்.

இதையும் படிங்க: இப்படியே போனா தொங்கவிட்டு அடிப்பானுங்க…! சந்திரமுகிக்கும் எனக்கும் சம்மந்தமே இல்லை..! ஜகா வாங்கிய லாரன்ஸ்..

மேலும் செட்டிலும் தனித்தனி கழிவறையும் கிடையாதாம். ஆண், பெண் நடிகர்கள் ஒரே கழிவறையைத்தான் பயன்படுத்தினார்களாம். அதனாலேயே சிறுநீரகத் தொற்றும் வந்துவிட்டதாம். இவருக்கு மட்டுமில்லை. அந்த தொடரில் நடித்த பெரும்பாலான நடிகர்களுக்கும் இந்த மாதிரி பிரச்சினைகள் இருந்ததாம்.

அடிக்கடி மருத்துவமனையில் சேர்ந்ததால் தனியாக வீடு பார்த்து தருகிறோம். அதில் தங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி அழைத்து வந்தார்களாம். ஆனால் இரண்டு வருடங்கள் ஆயினும் ஹோட்டலிலேயே தங்க வைத்தார்களாம் பிரீத்தியை.

இதையும் படிங்க: எஸ்.ஜே.சூர்யாவுக்கு இந்த நோய் இருக்கு!.. பேட்டியில் ஓபனாக உடைத்த இயக்குனர்… இதுவுமா!

மேலும் என்னை வில்லியாக காட்ட ஆரம்பித்ததில் இருந்தே மக்கள் என்னை வெறுக்க ஆரம்பித்தார்கள் என்றும் கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்ட ஆரம்பித்தார்கள் என்றும் கூறினார். அதுமட்டுமில்லாமல் என்னையும் அசீமையும் ஒன்று சேர்த்து தப்பாக பேச ஆரம்பித்தார்கள்.

சக நடிகை ஒருவரே எங்களை பற்றி தவறாக பேசினார். அவரை தொடர்பு கொண்டு நான் திட்டினேன் என்றும் பிரீத்தி கூறினார். ஆனால் எனக்கும் அசீமுக்கும் அடிக்கடி சண்டை வரும். ஆனால் அதை நாங்களே பேசித்தீர்த்துக் கொள்வோம் என்றும் அதையும் தாண்டி அசீம் எனக்கு நண்பரும் இல்லை. எதிரியும் இல்லை. கூட நடிக்கும் சக நடிகர். அவ்ளோதான் என்று பூவரசி பிரீத்தி கூறினார்.

Next Story