Connect with us

Cinema News

காதல் கல்யாணம் பண்ணாலும் ஏன் டைவர்ஸ் நடக்குது?.. மாநகரம் ஸ்ரீ வாழ்க்கையில இப்படியொரு சோகமா?..

மாநாகரம் படத்தில் ஹீரோவாக நடித்த ஸ்ரீ, விக்ரம் பிரபு, விதார்த், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபர்ணதி மற்றும் சானிய ஐயப்பன் நடிப்பில் உருவாகி உள்ள இறுகப்பற்று டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

படத்தின் ப்ரோமோஷனுக்காக ஆரம்பத்தில் மாநகரம் ஸ்ரீக்கும் சானியா ஐயப்பனுக்கும் திருமணம் ஆகும் போட்டோவை கசிய விட்டு படக்குழு பரபரப்பை பற்ற வைத்தனர்.

இதையும் படிங்க: இப்படியே போனா தொங்கவிட்டு அடிப்பானுங்க…! சந்திரமுகிக்கும் எனக்கும் சம்மந்தமே இல்லை..! ஜகா வாங்கிய லாரன்ஸ்..

இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள டிரைலரில் கணவன் மனைவி இடையே ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் சிக்கல்கள் குறித்த பாடமாக இந்த படத்தை எடுத்துள்ளனர்.

சமீபத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் வெளியான குஷி திரைப்படமும் இதே போன்ற கதையை அடிப்படையாக கொண்டு வெளியான நிலையில், இறுகப்பற்று படத்தில் மூன்று ஹீரோக்கள் மற்றும் மூன்று ஹீரோயின்கள் என பல சுவாரஸ்யங்கள் மற்றும் ட்விஸ்ட் கலந்து இந்த படத்தை உருவாக்கி உள்ளனர்.

இதையும் படிங்க: எஸ்.ஜே.சூர்யாவுக்கு இந்த நோய் இருக்கு!.. பேட்டியில் ஓபனாக உடைத்த இயக்குனர்… இதுவுமா!

சிறு பட்ஜெட் படங்கள் என்றாலும், மேக்கிங் குவாலிட்டி உள்ளிட்ட விஷயங்களில் எந்தவொரு சமரசமும் செய்துக் கொள்ளாமல் நல்லா ஒரு பாலிவுட் படம் பார்க்கும் ஃபீலிங்கை தொழில்நுட்ப ரீதியாக கொடுத்துள்ளனர்.

அன்பே ஆருயிரே என காதலிக்கும் மாநகரம் ஸ்ரீயும் சானியா ஐயப்பனும் திருமணம் செய்து கொண்ட பிறகு, எந்தவொரு ஃபீலிங்கும் வரலை என சொல்வதும், விவாகரத்து பெற முடிவு செய்வதுமாக ஒரு கதை ஓட, அபர்ணதியுடன் குழந்தை பெற்று குடும்பம் நடத்தி வரும் விதார்த்துக்கும் அபர்ணதிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு அவர்கள் பிரிவது சேர்வது என ஒரு கதை செல்கிறது.

விவாகரத்து பெற விரும்புவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தானும் தனது ஜோடி விக்ரம் பிரபுவும் பர்ஃபெக்ட் ஃபார் ஈச் அதர் என நினைத்துக் கொண்டிருக்க, அவர்களுக்குள்ளும் ஒரு சண்டை வெடிப்பதாக டிரைலரில் படத்தின் கதையையே கச்சிதமாக காட்டி உள்ளனர். வரும் அக்டோபர் 6ம் தேதி இந்த படம் வெளியாகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top