பொன்னியின் செல்வன் 2 போனி ஆகலைன்ன உடனே தமிழை மறந்துட்டாரா மணிரத்னம்?.. ஆங்கில டைட்டில் ஏன்?..
பகல் நிலவு படத்தில் தொடங்கி பொன்னியின் செல்வன் 2 வரை தமிழிலேயே தனது திரைப்படங்களுக்கு பெயர் வைத்து வந்த இயக்குனர் மணிரத்னம் முதன்முறையாக ஆங்கிலத்தில் தலைப்பு வைத்துள்ளாரே என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்த நாள் நாளை கொண்டாட உள்ள நிலையில், அதனை முன்னிட்டு தக் லைஃப் படத்தின் அறிமுகக் காட்சி தற்போது வெளியானது. இதையும் படிங்க: இந்த படத்துல ஜெமினி நடிக்கக்கூடாது!.. சாவித்ரி போட்ட கண்டிஷனில் தலைதெறிக்க ஓடிய இயக்குனர்… மருதநாயகம் போல […]
பகல் நிலவு படத்தில் தொடங்கி பொன்னியின் செல்வன் 2 வரை தமிழிலேயே தனது திரைப்படங்களுக்கு பெயர் வைத்து வந்த இயக்குனர் மணிரத்னம் முதன்முறையாக ஆங்கிலத்தில் தலைப்பு வைத்துள்ளாரே என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்த நாள் நாளை கொண்டாட உள்ள நிலையில், அதனை முன்னிட்டு தக் லைஃப் படத்தின் அறிமுகக் காட்சி தற்போது வெளியானது.
இதையும் படிங்க: இந்த படத்துல ஜெமினி நடிக்கக்கூடாது!.. சாவித்ரி போட்ட கண்டிஷனில் தலைதெறிக்க ஓடிய இயக்குனர்…
மருதநாயகம் போல உள்ளது என்றும், ஏழாம் அறிவு எஃபெக்ட் இருப்பதாகவும் ஹாலிவுட் படமான மேட் மேக்ஸ் உணர்வை தருவதாகவும் அடுத்த சம்பவத்தை ஆண்டவர் செய்யப் போகிறார் என்றும் ஏகப்பட்ட கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.
மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், திரிஷா மற்றும் துல்கர் சல்மான் நடிப்பில் ரெடியாகி வரும் கமல்ஹாசனின் 234 வது படத்திற்கு தக் லைஃப் என தலைப்பிட்டுள்ளனர். இந்நிலையில், அந்த டைட்டில் மட்டும் ரசிகர்களை குறிப்பாக மணிரத்னம் ரசிகர்களை அதிகம் உருத்தி வருகிறது.
இதையும் படிங்க: இது என்னடா டைட்டில்?!.. கேஜிஎப் ரேஞ்சிக்கு பில்டப்!.. எடுபடுமா கமல் 234?!.. டைட்டில் வீடியோ பாருங்க!..
அதற்கு காரணம், இதுவரை எந்த ஒரு படத்திற்கும் மணிரத்னம் ஆங்கிலத்தில் தலைப்பு வைக்காத நிலையில், முதன்முறையாக இப்படி ஒரு வித்தியாசமான தலைப்பை மணிரத்னம் வைக்க என்ன காரணம் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
முன்னதாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தையே PS1 மற்றும் PS2 என அறிவிக்கும்போது பொன்னியின் செல்வன் என அழகான தமிழில் அறிவிப்பு விடுங்க என பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: KH234: நாயகன் பட இரண்டாம் பாகமா தக் லைஃப்? யாகுசாவாக மிரட்டும் கமலுக்கு அடுத்த மைல்கல்லா?..
பான் இந்தியா வெற்றியை அடையவே இப்படி ஒரு ஆங்கில தலைப்பை வைத்துள்ளதாக கூறுகின்றனர். பாகுபலி என்ற தலைப்பு ஆங்கிலத் தலைப்பு இல்லாத நிலையிலும் உலகம் முழுவதும் அதனை அனைவரும் உற்றுநோக்க காரணமே அதன் கண்டெண்ட் தான் என்றும் தற்போது விவாதங்கள் கிளம்பியுள்ளன.
டைட்டில் எல்லாம் ஒரு பிரச்சனையே கிடையாது என்றும் படம் தரமாக அமைந்தாலே போதும், அறிமுக டீசரே அட்டகாசமாக உள்ள நிலையில், படம் நிச்சயம் பந்தயம் அடிக்கும் என கமல் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். மேலும், குண்டர்கள் வாழ்க்கை என வைத்தால் நல்லாவா இருக்கும் என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது.