நான் கருப்பு திராவிடன்.! அப்பாவுக்கு போட்டியாக வேட்டி கட்டி களமிறங்கிய யுவன்.!
தமிழ் சினிமாவில் பல இளைஞர்களின் விருப்பமான இசை அமைப்பாளர்களில் மிக முக்கியமானவர் என்றால் தற்போது வரை யுவன் சங்கர் ராஜாதான் என்று கூறுவார்கள். தற்போது அவர் பாடல்கள் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை என்றாலும், அவர் ஏற்கனவே போட்ட பாட்டுக்கள் இன்னும் நூறு வருடங்கள் அவர் பெயரை கூறிக்கொண்டு இருக்கும். அவருடைய பாட்டுகள் மட்டுமல்லாமல், அவருடைய உடை, பேச்சு, செயல் என அனைத்தும் இளைஞர்கள் மத்தியில் அவ்வப்போது டிரெண்டாகும். அப்படித்தான் கடந்த வருடம் அவர் அணிந்திருந்த 'ஐ அம் […]
தமிழ் சினிமாவில் பல இளைஞர்களின் விருப்பமான இசை அமைப்பாளர்களில் மிக முக்கியமானவர் என்றால் தற்போது வரை யுவன் சங்கர் ராஜாதான் என்று கூறுவார்கள். தற்போது அவர் பாடல்கள் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை என்றாலும், அவர் ஏற்கனவே போட்ட பாட்டுக்கள் இன்னும் நூறு வருடங்கள் அவர் பெயரை கூறிக்கொண்டு இருக்கும்.
அவருடைய பாட்டுகள் மட்டுமல்லாமல், அவருடைய உடை, பேச்சு, செயல் என அனைத்தும் இளைஞர்கள் மத்தியில் அவ்வப்போது டிரெண்டாகும். அப்படித்தான் கடந்த வருடம் அவர் அணிந்திருந்த 'ஐ அம் எ தமிழ் பேசும் இந்தியன்' எனும் டீசர்ட் பயங்கர வைரலானது. இந்திய அளவில் அது ஒரு ட்ரெண்ட் ஆக மாறியது.
அப்படி தான் தற்போது ஓர் இன்ஸ்டாகிராம் பதிவை பதிவிட்டு மீண்டும் தலைப்பு செய்தியாக மாறியுள்ளார் யுவன் சங்கர் ராஜா. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'நான் கருப்பு திராவிடன் என்பதில் பெருமை கொள்கிறேன்' எனும் ஆங்கிலத்தில் பதிவிட்டு, கருப்பு டீ-ஷர்ட் மற்றும் கருப்பு வேட்டி அணிந்திருந்த புகைப்படத்தை அதில் பதிவேற்றியுள்ளார். இந்த புகைப்படமும் வசனமும் தான் தற்போது இந்தியா முழுக்க வைரலாக பரவி வருகிறது.
இதையும் படியுங்களேன் - நட்புனா இதுதான் நட்பு.! மறைந்த விவேக் சாருக்கு பெருமை சேர்ந்த அந்த நெகிழ்ச்சி சம்பவம்.!
சில தினங்களுக்கு முன்னர் ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, இசைஞானி இளையராஜா அவர்கள், மறைந்த டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களையும், பிரதமர் மோடி அவர்களையும் ஒப்பிட்டு ஒரு கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார். அது இளையராஜாவுக்கு எதிராக தமிழகத்தில் பலரும் கருத்து தெரிவித்து வரும் சூழலுக்கு தள்ளியது. இருந்தாலும் அந்த கருத்தில் இருந்து அவர் பின்வாங்கவில்லை.
தற்போது அவரது மகன் யுவன் ஷங்கர் ராஜா, இன்ஸ்டாகிராமில் இவ்வாறு பதிவிட்டு இருப்பது இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரையும் தற்போது இணையம் மற்றும் இன்றைய செய்தியில் பேசுபொருளாக ஆக்கியுள்ளது.