நடிகர் விஜய்யுடன் தெறி படத்தில் நடித்து பிரபலமான எமி ஜாக்சன் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான மதராசப்பட்டினம் படத்தில் அறிமுகமானர். அந்த படத்தின் வெற்றிக்குப் பின்னர், தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் முதல் தனுஷ் வரை பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார்.
அதன் பின்னர் தொழிலதிபருடன் ஏற்பட்ட காதல் காரணமாக மீண்டும் தனது சொந்த நாடான இங்கிலாந்துக்கே சென்று செட்டில் ஆகி ஒரு குழந்தையையும் பெற்றுக் கொண்டார்.
இதையும் படிங்க: மூன்று மதங்களை ஒன்றிணைத்த லால் சலாம்!.. வேலூர் ரசிகர்கள் பண்ண தரமான சம்பவம்!..
குழந்தை கொஞ்சம் வளர்ந்ததும் மீண்டும் நடிக்க ஆசைப்பட்ட எமி ஜாக்சனுக்கும் அவரது பிசினஸ் கணவருக்கும் சண்டை ஏற்பட்டது. அதன் காரணமாக இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்தனர்.
கணவரை பிரிந்த உடனே இங்கிலாந்து நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை காதலிக்கத் தொடங்கிய எமி ஜாக்சன் ஒரு வருடத்துக்கும் மேல் அவருடன் எல்லா இடங்களுக்கும் சென்று லிவிங் டுகெதர் வாழ்க்கையில் ஈடுபட்டு வந்த நிலையில், சமீபத்தில் அவரது காதலை ஏற்றுக் கொண்டார்.
இதையும் படிங்க: கேமியோ ரோலில் கூட மாஸ் காட்டிய ரஜினிகாந்த் படங்கள்… இத நோட் பண்ணீங்களா?
மீண்டும் தமிழில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான மிஷன் சேப்டர் 1 படத்தில் நடித்து கோலிவுட்டுக்கு கம்பேக் கொடுத்தார். பொங்கலுக்கு வெளியான அயலான் மற்றும் கேப்டன் மில்லர் படங்களை விட அருண் விஜய் நடித்த மிஷன் சேப்டர் 1 படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. ஆனால், பெரிதாக தியேட்டர்கள் கிடைக்கவில்லை என படக்குழுவினரே வருத்தமடைந்தனர்.
இந்நிலையில், லேட்டஸ்ட்டாக தனது புதிய காதலருடன் பாத் டப்பில் ஆடையில்லாமல் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் எமி ஜாக்சன்.