அஜீத் இவ்ளோ பெரிய ஆளா வருவாருன்னு அப்பவே கணித்த நடிகர்... ஆனா அது அல்டிமேட்டுக்கே தெரியாதாம்...!

by sankaran v |
Ajith
X

Ajith

அஜீத்குமார் தமிழ்த்திரை உலகின் அல்டிமேட் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். எந்த வித பேக்ரவுண்டும் இல்லாமல் தன்னெழுச்சியாக நடித்து தனக்கென தனி பாதையை வகுத்துக் கொண்டு சினிமாவில் வெற்றி நடை போட்டவர் தான் அஜீத்.

இவருடைய படங்களில் இவர் நடிப்பைப் பார்க்கும்போது அதுல ஒரு தனி லுக் இருக்கும். இவரது நடிப்பைப் பார்த்துக் கொண்டே இருக்கணும் போல அப்படி ஒரு சுவாரசியம் அதுல இருக்கும். அவர் நடித்த முதல் படம் அமராவதி. இது பெரிய அளவு வரவேற்பைப் பெறவில்லை. தொடர்ந்து இவருக்குப் பெயர் வாங்கித் தந்த படம் பவித்ரா. தொடர்ந்து நடிகர் விஜய் உடன் இணைந்து ராஜாவின் பார்வையிலே படத்தில் நடித்தார்.

அதன்பிறகு 1995ல் இவருக்கு சினிமா உலகில் தனிப்பெயரைப் பெற்றுக் கொடுத்த படம் ஆசை. இந்தப் படத்தில் தான் இவருடைய நடிப்பு பல தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. படமும் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. தொடர்ந்து காதல் மன்னன், அவள் வருவாளா படங்கள் வந்தன. ஆனால் அவர் ரெட், சிட்டிசன், அமர்க்களம் என ஆக்ஷன் களத்தில் குதித்ததும் அவரோட கேரியர் வேற லெவலுக்குப் போய் விட்டது.

Ajith, Publu

Ajith, Publu

அப்போது ரஜனி, கமல் எப்படி போட்டியாளர்களாக இருந்தார்களோ அதே போல இப்போது விஜய், அஜீத் போட்டியாளர்களாக மாறிவிட்டனர். இன்று வரை அந்த மவுசு கொஞ்சம் கூட குறையவில்லை அல்டிமேட் அஜீத்துக்கு என்றே சொல்லலாம். தற்போது இவர் நடித்து வரும் விடாமுயற்சி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பிரபல நடிகர் பப்லு பிருத்விராஜ் அஜீத் உடன் நடித்த தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் சொன்ன தகவல்கள் ஆச்சரியமாக இருந்தன. என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா...

அவள் வருவாளா படத்தில் அஜீத் சாருடன் நடித்தேன். அது ஒரு தெலுங்கு படத்தின் ரீமேக். அதுலயும் நான் தான் நடிச்சேன். அஜீத் அந்தப் படத்துல நடிக்கிறதுக்கு முன்னாடி 3 ஹிட் கொடுத்துட்டாரு. அதுக்கு அப்புறம் 3 ஹிட் கொடுத்தாரு. அஜீத்தைப் பார்க்கும் போது அவரு பெரிய நடிகராவாருன்னு நினைச்சேன். அவரு முகத்துல ஒரு 'ஸ்பார்க்' இருந்தது. பார்க்கும்போதே தெரியும். 'இந்தப் பையன் நல்லா வருவான்'னு. அதுவரைக்கும் கூட அவருக்கு பெரிசா சீரியஸ்னஸ் இல்ல. சும்மா சம்பாதிச்சா போதும்னு நினைச்சாரு. இது சூப்பர்ஸ்டாரா வரும்கறனு அவருக்கே தெரியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story