படப்பிடிப்பில் கண்டபடி மகனை திட்டிய சிவாஜி..! – பயந்து ஓடிய நடிகை…

by Rajkumar |
படப்பிடிப்பில் கண்டபடி மகனை திட்டிய சிவாஜி..! – பயந்து ஓடிய நடிகை…
X

எம்ஜிஆர் சிவாஜிக்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிகமாக நடிகர்களின் வாரிசுகள் வாய்ப்புகள் பெற்று நடிக்க துவங்கினர். நடிகர் கார்த்தி,பிரபு போன்ற இன்னும் பல நடிகர்கள் அவர்களின் தந்தையின் செல்வாக்கை பயன்படுத்திதான் கதாநாயகன் ஆனார்கள்.

இந்த நடிகர்கள் தங்களது தந்தையை விட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருந்தவர். ஏனெனில் ஒருவரின் வாரிசு என்று சினிமாவிற்கு வரும்பொழுது அவர்களின் தந்தையோடு மக்கள் கண்டிப்பாக ஒப்பிட்டு பார்ப்பார்கள்.

SHIVAJI

SHIVAJI

மற்ற நடிகர்களை காட்டிலும் இந்த பிரச்சனை நடிகர் பிரபுவிற்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ஏனெனில் தமிழ் சினிமாவில் பெரும் நடிகராக விளங்கிய நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனாக பிரபு இருந்ததால் சிவாஜி கணேசனுக்கு நிகரான ஒரு நடிப்பை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தார்.

ஆனால் கிட்டத்தட்ட சிவாஜியின் நடிப்பை காப்பி அடித்தார் போலவே பிரபுவின் நடிப்பும் இருந்தன. அப்போதைய காலகட்டத்தில் பிரபுவை வளர்த்து விடுவதற்காக நிறைய படங்களில் பிரபுவோடு சேர்ந்து சிவாஜி நடித்தார். அதேபோல நடிகை ராதிகாவும் பிரபுவிற்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார்.

prabhu

prabhu

இடையில் ஒரு பேட்டியில் ராதிகா இது குறித்து கூறும் பொழுது சிவாஜியுடன் பிரபு சேர்ந்து நடித்தது போல உள்ள படங்களில் பிரபு அதிகமாக திட்டு வாங்குவார் என்கிற செய்தியை கூறியுள்ளார். பிரபுவிற்கு சிவாஜியை பார்த்தாலே பயமாக வந்துவிடும். அதனால் வசனங்களை மறந்து விடுவார் பிரபு அவருக்கு முன்னால் சிவாஜி வந்து நின்றதுமே வசனங்களை தவறாக கூற துவங்கி விடுவார்.

அதனால் கோபமாகும் சிவாஜி கண்டபடி திட்ட தொடங்கி விடுவார் உடனே நான் அந்த இடத்தை விட்டு ஓடி விடுவேன். என ராதிகா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: விஜயை மீறி இது நடக்க வாய்ப்பில்லை! லோகேஷுக்கு இந்த நிலைமையா? – அதிருப்தியில் லியோ படக்குழு

Next Story