மைக் இருக்கிறது தெரியாம அந்த வார்த்தையை சொல்லிட்டேன்..! – படக்குழுவை திடுக்கிட வைத்த லோகேஷ்...

தற்சமயம் தமிழ் சினிமாவில் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருக்கும் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் ஒரு படம் இயக்குகிறார் என்றாலே அந்த படம் ஹிட்டுதான் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
அவரது முதல் திரைப்படமான மாநகரம் திரைப்படத்தில் துவங்கி அடுத்தடுத்து அவர் இயக்கிய திரைப்படங்கள் யாவும் ஒன்றை விட மற்றொன்று சிறப்பான ஹிட் கொடுத்தது என்றே கூறலாம். கைதி திரைப்படத்திற்கு பிறகு மாஸ்டர் திரைப்படத்திற்கான வாய்ப்பை பெற்றார் லோகேஷ்.

Lokesh Kanagaraj
அதற்கு பிறகு அவர் இயக்கிய விக்ரம் திரைப்படம் அவர் எதிர்பார்த்ததை விடவும் பெரும் ஹிட் கொடுத்தது. தமிழ் சினிமாவையே அதிர்ச்சியடைய வைக்கும் வசூலை கொடுத்தது விக்ரம். ஒருமுறை விக்ரம் படப்பிடிப்பு சம்பவங்கள் குறித்து கூறும்போது ஒரு சம்பவத்தை பகிர்ந்தார் லோகேஷ்.
விக்ரம் திரைப்படத்தில் சாண்டி மாஸ்டர்தான் டான்ஸ் மாஸ்டராக பணிப்புரிந்தார். அவர் கமலுக்கு நடனத்தை கற்றுக்கொடுத்த பிறகு படத்தின் முதல் படப்பிடிப்பே பத்தல பத்தல பாடலுக்குதான் எடுக்கப்பட்டது.

Vikram
அப்போது முதல் டேக்கிலேயே சிறப்பாக அந்த நடனத்தை ஆடியுள்ளார் கமல். லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே கமல்ஹாசனின் ரசிகர் என்பதால் கட் கூட சொல்லாமல் மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென கமலுக்கு யாரோ சென்னை பாஷையில் கத்துவது கேட்டுள்ளது.
யாரென்று திரும்பி பார்த்தால் லோகேஷ் கனகராஜ். இயக்குனர்கள் எப்போதும் கையில் மைக் வைத்திருப்பார்கள். கமல் ஆட்டத்தால் மெய் மறந்து போயிருந்த லோகேஷ், கையில் மைக் உள்ளதையும் மறந்துவிட்டு கத்தியுள்ளார். இதை அவர் பேட்டியில் கூறியிருந்தார்.
இதையும் படிங்க:ரஜினிக்காக அத டிரை பண்ணி பெரும் அடியை சந்திச்சதுதான் மிச்சம்!.. புலம்பும் சங்கர்..