200 நாள் கால்ஷூட்டா.. விஜய்க்கு சம்பவம்தான் போல!.. தளபதி 69 குறித்து வந்த அப்டேட்..

by Rajkumar |
200 நாள் கால்ஷூட்டா.. விஜய்க்கு சம்பவம்தான் போல!.. தளபதி 69 குறித்து வந்த அப்டேட்..
X

vijay3

கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான வாரிசு படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து வரிசையாக படங்களில் நடித்து வருகிறார் விஜய். ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு படமாக கமிட்டாகி வருகிறார். தற்சமயம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் சேர்ந்து மாஸ்டர் திரைப்படத்தில் பெரும் வெற்றியை கொடுத்திருந்தார் விஜய். எனவே லியோ படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது. கமல், லோகேஷ் கூட்டணியில் வெளியான விக்ரம் திரைப்படத்தின் வசூலை லியோ திரைப்படம் மிஞ்சி வசூல் செய்யும் என்று கூறப்படுகிறது.

vijay2

vijay2

லியோ படத்திற்கு பிறகு நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் ஆகஸ்ட்டில் துவங்கும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

அடுத்த பட அப்டேட்:

இந்த நிலையில் விஜய்யின் 69 வது படத்தின் அப்டேட் குறித்து சில தகவல்கள் இணையத்தில் வலம் வருகின்றன. அதாவது வெற்றிமாறன் இயக்கத்தில்தான் அடுத்து விஜய் நடிக்கப் போவதாக தகவல்கள் உள்ளன. வெங்கட் பிரபு படத்தை முடித்த பிறகு இந்த படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Vetrimaaran

Vetrimaaran

ஆனால் இந்த படத்திற்கு 200 நாட்கள் வெற்றிமாறன் கால் சீட் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாகவே வெற்றிமாறன் திரைப்படத்திற்கு அவர் அதிக கால் சீட் வாங்குவது வழக்கம்தான். ஆனால் வெற்றிமாறனுக்கு ஏற்கனவே விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டியுள்ளது, மேலும் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காகவும் அவர் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் அடுத்து விஜய்யை கொண்டு படத்தை இயக்குவாரா என்பது தெரியவில்லை! ஆனால் விஜய் கமிட் ஆகும்பொழுது அந்த படத்திற்காக அதிக கால் சீட்டை விஜய் கொடுக்க வேண்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அவன் திருநங்கையை கூட விட்டு வைக்கல; சீரியலில் இதுதான் நடக்கிறது! கொந்தளித்த பயில்வான்!

Next Story