ஆங்கிலம் தெரியாது என்ற கர்வத்தில் இருந்த தயாரிப்பாளர்!.. எண்ணத்தை தவிடு பொடியாக்கிய எம்ஜிஆர்..
தமிழ் சினிமாவில் சாதித்தவர்கள் பெரும்பாலோனோர் கல்வியறிவில் திறம்பட இல்லாவிட்டாலும் பகுத்தறிவில் கைதேர்ந்தவர்களாக இருந்தனர். சிவாஜி, எம்ஜிஆர், ரஜினி, கமல் என சினிமாவில் கோலோச்சி நடிகர்கள் ஓரளவு பள்ளிப்படிப்பை தான் முடித்திருக்கிறார்கள். அந்தக் காலத்தில் டிகிரி படிப்பை முடித்தவர் என்றால் நடிகர் ஜெய்சங்கர் மற்றும் அசோக் இவர்கள் தான்.
ஆனால் இளந்தலைமுறை நடிகர்கள் பல பேர் பட்டப்படிப்பை முடித்து விட்டு தான் சினிமாவிற்குள் வருகின்றனர். இந்த நிலையில் எம்ஜிஆரின் ஞான அறிவை குறைந்து மதிப்பிட்ட ஒரு பிரபலத்தை பிரமிக்க வைத்திருக்கிறார் எம்ஜிஆர். எம்ஜிஆர் ஏழாவது வரைக்கும் தான் படித்திருக்கிறாராம். ஆனால் ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஆண்ட லட்சிய மனிதராக திகழ்ந்தார்.
அவர் முதலமைச்சர் பதவியை ஒரு சமயம் இந்திரா காந்தி ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. அடுத்த தேர்தல் நடத்த எப்படியும் ஒரு வருடகாலம் ஆகும் என்பதால் அந்த இடைப்பட்ட காலத்தில் ஒரு படத்தில் நடித்து விடலாம் என்று எம்ஜிஆர் கருதினாராம்.
‘கிழக்கு ஆஃபிரிக்காவில் ராஜு’ என்று பெயரிடப்பட்ட படத்தை என்.ஏ.சி வாங்குமாறு ஆனந்தா பிக்சர் அதிபர் லட்சுமணனிடம் கேட்டாராம் எம்ஜிஆர். அவரும் சம்மதிக்க உடனே எம்ஜிஆருக்கு அட்வான்ஸ் , அக்ரிமெண்ட் பேப்பர் எல்லாம் தயாராகிவிட்டதாம். அப்போது அந்த அக்ரிமெண்ட் ஆங்கிலத்தில் இருந்திருக்கின்றது.
இப்போதைய ஆனந்தா பிக்சர்ஸ் நிறுவனரும் பில்லா பட தயாரிப்பாளருமான எல்.சுரேஷ் சி.ஏ. பட்டப்படிப்பை முடிந்திருந்தாராம். அவரும் உடன் இருந்திருக்கிறார். அந்த அக்ர்மெண்ட் எம்ஜிஆர் கைக்கு போனதும் சுரேஷ் ‘இவருக்கு என்ன ஆங்கிலம் தெரியும்’ என்று எம்ஜிஆரை ஏளனமாக நினைத்தாராம்.
ஆனால் எம்ஜிஆர் அந்த அக்ரிமெண்ட் பேப்பரை பார்த்து ‘இந்த பக்கத்தில் இந்த வரியில் சரியில்லாமல் இருக்கிறதே’ என்று கூறி சுரேஷின் ஆவணத்தை அடியோடு தகர்ந்தெறிந்திருக்கிறார். அதன் பின் அந்த அக்ரிமெண்ட் பேப்பர் சரியாக திருத்தப்பட்டு வந்த பிறகே கையெழுத்தானதாம்.
இதை பற்றி கூறிய ஆனந்தா எல்.சுரேஷ் ஆணவத்தால் ஒரு மனிதனின் புத்தி தரிகெட்டு அலையும் என்பதற்கேற்ப அன்று என் ஆணவத்தை முற்றிலுமாக உடைத்தார் எம்ஜிஆர் என்று ஒரு பேட்டியில் கூறினார். ஆனால் அதன் பின் தேர்தல் மூன்று மாதங்களுக்குள் வந்ததால் அந்த படத்தில் எம்ஜிஆரால் நடிக்காமல் போனது .
இதையும் படிங்க : அவன் வரமாட்டான்.. வரமாட்டான்!.. திருவிளையாடல் காமெடி உருவானது இப்படித்தானாம்!..