Connect with us
anandaraj

Cinema History

ஆனந்தராஜ் காமெடியில் கலக்கிய 5 அசத்தலான திரைப்படங்கள்… இது செம கலாட்டா…

1988ம் தேதி முதல் தமிழ் சினிமாவில் கலக்கி வருபவர் நடிகர் ஆனந்தராஜ். ஒருவர் வாழும் ஆலயம் என்பதுதான் இவரின் முதல் திரைப்படம். துவக்கத்தில் வில்லனாக நடிக்க துவங்கினார். பல வருடங்கள் இவர் வில்லனாக நடித்துள்ளார். விஜயகாந்த், பிரபு, கார்த்தி, சத்தியராஜ், ரஜினி, கார்த்தி என 80,90 களில் முன்னணி நடிகராக இருந்த பலரின் திரைப்படங்களிலும் வில்லனாக நடித்துள்ளார்.

anandaraj

நிறைய படங்களில் கற்பழிப்பு காட்சிகளிலும் நடித்து பெண்களை பயமுறுத்தியவர் ஆனந்தராஜ். அதேபோல், விஜயகாந்த் நடித்த புலன் விசாரணை, மாநகர காவல் ஆகிய திரைப்படங்களில் கொடூர வில்லனாக அசத்தியிருப்பார். தமிழ் மட்டுமின்றி பல தெலுங்கு திரைப்படங்களிலும் ஆனந்தராஜ் நடித்துள்ளார்.

ஒருகட்டத்தில் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டு அக்கட்சிக்காக பிரச்சாரம் செய்தார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அந்த கட்சியிலிருந்தும் ஒதுங்கினார். மேலும், இனிமேல் வில்லனாக நடிப்பது சரிவராது என புரிந்துகொண்ட ஆனந்தராஜ் காமெடி ரூட்டுக்கு மாறினார். அது ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்துபோய் இப்போது வரை அதை தொடர்ந்து வருகிறார் ஆனந்தராஜ். இயக்குனர்களும் அவருக்கு காமெடி கலந்த வில்லன் வேடங்களையோ கொடுத்து வருகின்றனர். அப்படி ஆனந்தராஜ் காமெடியில் கலக்கிய 5 திரைப்படங்களை இங்கு காண்போம்.

தில்லுக்கு துட்டு:

santhanam

லொல்லு சபா ராம் பாலா இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்த திரைப்படம்தான் தில்லுக்கு துட்டு. இப்படத்தில் சந்தானத்திற்கு அப்பாவாகவும், சரக்கடிப்பதில் ஆர்வம் உள்ளவராகவும் காமெடியில் அசத்தியிருப்பார். இப்படத்தில் ஆனந்தராஜை சந்தானம் கவுண்ட்டர் வசனங்களில் கலாய்த்துக்கொண்டே இருப்பார். அது ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. அதேபோல், ஆனந்தராஜும், கருணாஸும் இப்படத்தில் அடிக்கும் லூட்டி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

நானும் ரவுடிதான்:

anandraj

anandraj

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன் உள்ளிட்ட பலரும் நடித்த படத்தில் லோக்கல் ரவுடியாக ஆனந்தராஜ் ரசிகர்களை சிரிக்க வைத்திருப்பார். குறிப்பாக விஜய் சேதுபதி ரூ.10 லட்சத்தை கொடுக்கும் காட்சியில் அவர் பேசும் வசனங்கள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

முண்டாசுப்பட்டி :

anandaraj

அறிமுக இயக்குனர் ராம் குமார் இயக்கிய இப்படத்தில் விஷ்ணு விஷால், நந்திதா ஸ்வேதா, காளி வெங்கட் என பலரும் நடித்திருந்தனர். இப்படத்தில் பூனை சூப் குடிக்கும் ஜமீன்தாராகவும், முண்டாசுப்பட்டி மக்கள் சாமி என வணங்கும் ஒரு கல்லை எப்படியாவது திருடி விற்க நினைக்கும் கதாபாத்திரத்தில் ரசிகர்களை சிரிக்க வைத்திருப்பார்.

மரகத நாணயம் :

anandaraj

இப்படத்திலும் ஒரு லோக்கல் டானாகவே வருவார். இவருக்கு பிடிக்காதவர்களிடம் ஒரு ரேடியோ அனுப்பி அதன் மூலம் மட்டுமே பேசுவார். மேலும், மரகத நாணயத்தை அடையை இவர் எடுக்கும் முயற்சிகளும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இப்படத்தில் ஆதி கதாநாயகனாக நடித்திருந்தார்.

ஜாக்பாட்:

anandraj

anandraj

ஜோதிகாவும், ரேவதியும் இணைந்து நடித்த இப்படத்தில் ஆனந்தராஜ் அசத்தலான வில்லனாக காமெடியில் கலக்கியிருப்பார். இப்படத்தில் ஜோதிகாவும், ரேவதியும் இவரை படாதபாடு படுத்துவார்கள். அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஓடி ரசிகர்களை சிரிக்க வைத்தார். மேலும், இப்படத்தில் பெண் இன்ஸ்பெக்டராகவும் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்திருப்பார்.

இந்த படங்கள் மட்டுமில்லாமல் கதாநாயகன், கூர்கா, வணக்கம்டா மாப்ள, சிலுக்குவார்பட்டி சிங்கம், டிக்கிலோனா, இடியட் உள்ளிட்ட சில படங்களிலும் காமெடி கலந்த வில்லனாக அசத்தியிருந்தார் ஆனந்தராஜ்.

இதையும் படிங்க: மணிவண்ணன் என் கதையை திருடிட்டான் என மணிவண்ணனிடமே வந்து புகார் கொடுத்த கதாசிரியர்… ஏன்ப்பா இப்படி??

google news
Continue Reading

More in Cinema History

To Top