Connect with us

Cinema News

அன்பறிவு படத்தில் லோகேஷ் ஹீரோ இல்ல… இந்த ஸ்டார் தானாம்? தேவையா இதெல்லாம்..!

Lokesh Kanagaraj: அன்பறிவு இயக்கத்தில் நாயகனாக லோகேஷ் கனகராஜ் நடிக்க இருக்கிறார் என தகவல்கள் சமீபத்தில் கசிந்தது. ஆனால் அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளியாக தற்போது சில விஷயங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் ஒரு ட்விஸ்ட்டும் இருப்பதாக கூறப்படுகிறது.

லியோ படத்தின் ஷூட்டிங்கினை முடித்து விட்டு தற்போது ப்ரோமோஷன் வேலைகளிலேயே இயக்குனர் லோகேஷ் இறங்கிவிட்டார். இன்னும் 12 நாட்களே இருக்கும் நிலையில் படத்தின் சில சுவாரஸ்ய தகவல்கள் குறித்து பேட்டி கொடுத்து வருகிறார். 

இதையும் படிங்க: ஷூட்டிங்கில் ஹாயாக இருந்த ரஜினி… ஒரே அழைப்பால் அலற விட்ட பிரபலம்..! சூப்பர்ஸ்டாருக்கே இந்த நிலைமையா?

இந்த படத்தின் ரிலீஸ் முடிந்தவுடன், ரஜினியின் 171 பட வேளைகள் தொடங்கும் கேப்பில் லோகேஷ் கனகராஜ் சண்டை இயக்குனர்கள் அன்பறிவு இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்தது. லோகேஷ் ஹீரோவாக நடித்து விட்டே ரஜினி படத்தின் வேலைக்கு வருவார் எனவும் தெரிவித்தனர்.

ஆனால் அன்பறிவு இயக்கும் படத்தில் லோகேஷ் நாயகனாக நடிக்கவே இல்லையாம். அந்த படத்தின் கதையை மட்டுமே லோகேஷ் எழுதி ஒரு சின்ன கெஸ்ட் ரோல் மட்டுமே கொடுக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. அந்த படத்தில் அனிருத் தான் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

இதையும் படிங்க: கேஜிஎப் பட ரசிகர்களுக்கு செம ட்ரீட்!.. தெறி மாஸா உருவாகவுள்ள 3ம் பாகம்!.. பி ரெடி ஃபேன்ஸ்

மேலும், லோகேஷ் போல கமல், அஜித், ரஜினிகாந்த் என முன்னணி ஹீரோக்கள் படத்தில் பணிபுரிந்து வரும் அனிருத் படத்தில் நடிப்பாரா இல்லை கடைசி நேரத்தில் அவரும் கெஸ்ட் ரோல் ஓகே என வெளியேறி விடுவாரா எனப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

google news
Continue Reading

More in Cinema News

To Top