More
Categories: Cinema News latest news

அப்போ கூல் சுரேஷ்.. இப்போ தனுஷ் ஃபேன்.. பாவம் ஐஸ்வர்யா.. கேப்டன் மில்லர் நிகழ்ச்சியில் பாலியல் தொல்லை

சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மேடையிலேயே தொகுப்பாளினி ஐஸ்வர்யாவுக்கு மாலை போட்டு அவரை முகம் சுளிக்க வைத்தார் கூல் சுரேஷ். அது பெரிய சர்ச்சையாக வெடித்தது. அந்த மாலையை அங்கேயே தூக்கி வீசி கூல் சுரேஷை ஐஸ்வர்யா முறைத்த நிலையில், மன்சூர் அலி கான் ஓடி வந்து சமாதானப்படுத்தினார்.

இந்நிலையில், அதே தொகுப்பாளினி ஐஸ்வர்யாவுக்கு கேப்டன் மில்லர் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.

Advertising
Advertising

இதையும் படிங்க: டப்பிங் முடிந்தது என நினைச்சு வெளிநாடு புறப்பட்ட கமல்! கடைசி நேரத்தில் அவருக்கு குரல் கொடுத்தது யார் தெரியுமா?

நேரு ஸ்டேடியத்தில் அதிகளவிலான கூட்டத்தில் நேற்று இரவு கேப்டன் மில்லர் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நேரத்தில் தனுஷ் ரசிகர் ஒருவர் கூட்ட நெரிசலை பயன்படுத்தி தொகுப்பாளினி ஐஸ்வர்யாவை பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார் என்றே கூறப்படுகிறது. கோபமடைந்த ஐஸ்வர்யா காலுல விழுடா என்றும் செருப்பு பிஞ்சிடும்.. நடிக்கிற நாயே.. அப்புறம் ஏன்டா ஓடுன என அந்த இளைஞரின் சட்டையை பிடித்துக் கொண்டு விளாசி எடுக்கும் காட்சியை ஒட்டுமொத்த கூட்டமும் கேப்டன் மில்லர் நிகழ்ச்சியை மறந்து விட்டு கும்பலாக பார்த்து வீடியோ எடுத்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.

அந்தக் கூட்டத்தில் இவ்வளவு ஆவேசமாக ஐஸ்வர்யா திட்டி அடிக்கிறார் என்றார் கீழ்த்தரமான பாலியல் சீண்டலை தான் அந்த தனுஷ் ரசிகர் செய்திருப்பார் என நெட்டிசன்கள் அந்த வீடியோக்களை வைரலாக்கி வருகின்றனர்.

இதையும் படிங்க: விஜயகாந்துக்கு நடந்த அந்த ஆபரேஷன்தான் காரணம்!.. முதன் முறையாக வாய் திறக்கும் பார்த்த சாரதி..

இது தொடர்பாக விரைவில் தொகுப்பாளினி ஐஸ்வர்யா விளக்கம் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷின் கேப்டன் மில்லர் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை காண வந்த ரசிகர் கூட்டத்தை பயன்படுத்தி பெண் தொகுப்பாளினியிடம் இவ்வளவு மோசமாக நடந்துக் கொண்டு அடி வாங்கியது அந்த நிகழ்ச்சிக்கே அசிங்கத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

 

Published by
Saranya M

Recent Posts