விஜயகாந்துக்கு நடந்த அந்த ஆபரேஷன்தான் காரணம்!.. முதன் முறையாக வாய் திறக்கும் பார்த்த சாரதி..

Vijayakanth: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சமீபத்தில் மறைந்த சம்பவம் அவரின் கட்சி தொண்டர்களையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சி அடைய வைத்தது. பொதுமக்கள் பலரும் அவரின் மறைவுக்காக வருத்தப்பட்டனர். கடந்த பல வருடங்களாகவே அவருக்கு உடல் நலம் சரியில்லை.

vijayakanth

சரியாக சொல்ல வேண்டுமெனில் 2015ம் வருடத்திற்கு பின்னர்தான் அவரின் உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக மோசமாகி கொண்டே வந்தது. முதலில் அவர் பேசும் வார்த்தைகள் குளறியது. என்ன பேசுகிறோம் என்கிற நினைவு அவருக்கு குறைந்து கொண்டே வந்தது. மேடைகளில் பேசும்போதும் கூட தடுமாறினார். அவர் என்ன பேசுகிறார் என்பதும் பலருக்கும் புரியவில்லை. வார்த்தைகளை தெளிவாக அவரால் பேசமுடியவில்லை.

இதையும் படிங்க: விஜயகாந்த் தனது பிறந்தநாளை கொண்டாடியதே இதற்குத்தான்….46 வருட நண்பர் சொன்ன தகவல்…

சிங்கப்பூருக்கு கொண்டு சென்று அவருக்கு சில சிகிச்சைகள் செய்தனர். ஆனாலும் அவரின் உடலில் முன்னேற்றமே ஏற்படவில்லை. ஒருகட்டத்தில் நிற்கவோ, அமரவோ, பேசவோ, தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணரவோ கூட முடியாத நிலைக்கு மாறினர் விஜயகாந்த. ‘அப்படி என்னதான் அவருக்கு பிரச்சனை?’ என்கிற கேள்வி அவரின் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் எழுந்தது. அந்த கேள்விக்கு கடைசிவரை பதில் கிடைக்கவில்லை.

vijayakanth

விஜயகாந்திடம் 46 வருடங்களாக பயணித்து வருபவர் பார்த்த சாரதி. சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் இவர். எப்போதும் விஜயாகாந்துக்கு அருகிலேயே இருப்பவர் இவர். தற்போது விஜயகாந்த் இல்லாத நிலையில் ஊடகம் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்தார்.

இதையும் படிங்க: வடிவேலு மட்டும் மதுரை வந்தா வெட்டுறதுல தப்பே இல்ல… கொதித்தெழுந்த விஜயகாந்த் மேனேஜர்..

விஜயகாந்தின் உடல்நிலை பற்றி பேசிய அவர் ‘2015ம் வருடம் சிங்கப்பூரில் அவருக்கு இருதயத்தில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது ஏதே ஒரு தவறு நடந்துவிட்டது. மூளைக்கு போகும் ரத்தக்குழாயில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டது. அதன்பின்னர்தான் அவருக்கு எல்லாமே மாறியது. ஒருநாள் அப்படியே தலை சுத்தி கீழே விழுந்துவிட்டார். அது அவருக்கே பேரதிர்ச்சியாக இருந்தது. நான்தான் அவரை தூக்கி அமர வைத்தேன்’.

vijayakanth

அவருக்காக நான் வேண்டாத கடவுள் இல்லை. இப்போது அவர் இல்லை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. கட்சிக்கு உயிர் கொடுத்துவிட்டு அவர் சென்றிருக்கிறார். கண்டிப்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அண்ணியாருடன் ஆலோசனை செய்து முடிவெடுப்போம்’ என பார்த்த சாரதி கூறினார்.

 

Related Articles

Next Story