கூல் சுரேஷ் கன்னத்துல ஓங்கி ஒண்ணு விட்ருக்கணும்!.. கடுப்பான தொகுப்பாளினி கறாரான பேட்டி!..

அதிதி ஷங்கருக்கு லவ் லெட்டர் எழுதி சிக்கலில் சிக்கிய கூல் சுரேஷ் தற்போது சரக்கு இசை வெளியீட்டு விழாவில் தொகுப்பாளினி ஐஸ்வர்யாவிடம் அநாகரிகமாக நடந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மன்சூர் அலி கான் நடிப்பில் உருவாகி உள்ள சரக்கு படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கழுத்தில் மாலையுடன் உட்கார்ந்திருந்த கூல் சுரேஷை ஐஸ்வர்யா பேச அழைக்க, உடனடியாக அந்த தொகுப்பாளினி கழுத்தில் மாலையை போட்டு அவரை அதிர்ச்சியடைய வைத்தார்.

உடனடியாக மாலையை தூக்கி வீசியெறிந்த ஐஸ்வர்யா கூல் சுரேஷையும் முறைக்க பதறிப்போன மன்சூர் அலி கான் அவரிடம் அந்த இடத்திலேயே மன்னிப்பு கேட்க வைத்தார்.

இதையும் படிங்க: ”கீப் காம் அண்ட் ப்ரீப்பேர் ஃபார் பேட்டில்”.. அப்டேட் ரேஸில் புது ஐடியா பிடித்த லியோ படக்குழு! அடடா!

மேலும், தனியாக வீடியோ போட்டு கூல் சுரேஷ், "என்னால் நடித்து பெரியா ஆளா வர முடியலை. அதனால ஏதோ கிறுக்குத்தனமா சில வேலைகளை செஞ்சு பிழைப்பை ஓட்டிட்டிருக்கேன். நான் பண்றது எல்லாமே ஜாலிக்குத்தான். அப்படி விளையாட்டா செஞ்சதுதான் இப்படி மாலை போட்டதும். ஆனா ஒரு பெண்ணின் மனதை காயப்படுத்திட்டேன் என நினைக்கிறப்ப உண்மையாவே வருத்தமா இருக்கு.. நான் பண்ணது பெரிய தப்புதான். அதற்காக நான் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இனி இதுபோன்ற தவறுகள் செய்யமாட்டேன்" என மன்னிப்பு கேட்டிருந்தார்.

இந்நிலையில், அந்த விவகாரம் குறித்து பேசியுள்ள தொகுப்பாளினி ஐஸ்வர்யா, "அதை நினைச்சா இன்னும் ஷாக்கிங்கா இருக்கு. அதுவும் என் ஷோல்டர்ல பலவந்தமா அழுத்தி, யாரும் எதிர்பார்க்காத நேரத்துல மோசமா நடந்துக்கிட்டார். ஒருத்தர் பொதுமேடையில திடீர்னு இப்படி நடந்துகிட்டா என்னங்க செய்ய முடியும்? நான் ஏன் பளார்னு கூல் சுரேஷ் கன்னத்துல ஒரு அறை கொடுக்காம விட்டுட்டோம்னு இப்ப நினைக்கிறேன்."

இதையும் படிங்க: அப்பானு கூட யோசிக்காம விஷால் செஞ்ச வேலைய பாருங்க!… அப்பாகிட்ட பேசுற பேச்சா இது?…

"கிறுக்குத்தனமா நடக்குறதுல கூட ஒரு லிமிட் இருக்கு. மத்தவங்கள அது பாதிக்காம இருக்கணும். தெரியாம எல்லாம் பண்ணல.. கூல் சுரேஷுக்கு இதே வேலை தான். கூல் சுரேஷை மேடைக்குக் கூப்பிடறப்ப வெறுமனே நடிகர் கூல் சுரேஷ்னு கூப்பிடுவேன். ஆனால், அப்படிக் கூப்பிடக் கூடாது.. 'யூடியூப் சூப்பர் ஸ்டார்'னு பட்டம் இருக்கு, அதைச் சொல்லி கூப்பிட மாட்டீங்களா'ன்னு சொல்லிருக்கார்." "அதனால் தான் இந்தமுறை மாலையை வேணும்னே என் கழுத்தில் போட்டிருப்பார்னு தோணுது. இன்னொருமுறை இந்த மாதிரி நடந்துகிட்டா கன்னத்துல ஒரு அடியாவது கொடுத்திடுவேன், இல்லாவிட்டால் போலீஸில் புகார் கொடுக்கலாம்ன்னு இருக்கேன்” என பொங்கியுள்ளார் ஐஸ்வர்யா.

 

Related Articles

Next Story