அப்பானு கூட யோசிக்காம விஷால் செஞ்ச வேலைய பாருங்க!… அப்பாகிட்ட பேசுற பேச்சா இது?...

by amutha raja |
vishal and his dad
X

விஷால் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர். இவர் தனது குழந்தை பருவத்திலிருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். ஜாடிக்கேத்த மூடி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் பின் செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ரீமாசன் நடித்திருந்தார். இப்படம் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. பின் சண்டகோழி, தாமிரபரணி போன்ற பல படங்களின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். இதன் பின் நடித்த மலைகோட்டை, தீராத விளையாட்டு பிள்ளை போன்ற படங்கள் இவருக்கு தோல்வியை கொடுத்தன.

இதையும் வாசிங்க:ரஜினியுடன் இணையும் ஸ்டைலீஸ் இயக்குனர்?!.. அப்போ வேற லெவல் சம்பவம்தான் போலயே!…

பின் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் திரைப்படத்தில் தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் மீண்டும் மக்கள் கவனத்தை ஈர்த்தார். இப்படத்தில் இவருடன் ஆர்யாவும் இணைந்து நடித்திருந்தார். இருவருக்கும் இடையேயான நட்பு இப்பட வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

பின் நடிகராய் இருந்த இவர் தயாரிப்பாளராய் சினிமாவில் வலம் வர ஆரம்பித்தார். தனது சொந்த தயாரிப்பில் பாண்டிய நாடு, நான் சிவப்பு மனிதன் போன்ற திரைப்படங்களை தயாரித்தும் நடித்தும் வெளியிட்டார். விஷால் பிலிம் ஃபேக்டரி என்பது இவரின் தயாரிப்பு நிறுவனமாகும்.

இதையும் வாசிங்க:ஏங்க இப்படியா அல்பமா இருப்பீங்க.. சேரன் மனைவியிடம் ப்ளீஸ் சொன்ன மிஷ்கின்… அப்பையும் ஏமாத்திட்டாரு!

இவர் தற்போது ஆத்விக் ரவிசந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்துள்ளார். கடந்த வாரம் இப்படம் வெளியானதை அடுத்து அனைத்து தியேட்டர்களிலும் வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பின் விஷாலின் படம் வெற்றி அடைந்தது இப்படத்தில்தான். இப்படத்தில் இவருடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். இப்படம் படகுழுவினருக்கு லாபத்தை பெற்று தந்த வண்ணம் இருக்கிறது.

இவரது தந்தை ஜி.கே.ரெட்டி தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இவர் தனது உடலை பாதுகாக்க தினமும் உடற்பயிற்சி செய்வதாகவும் மேலும் ஒரு முறை பாத்ரூமில் இருந்து உடற்பயிற்சி செய்ததாகவும் தெரிவித்திருந்தார். அப்போது அதை அறிந்த விஷால் தனது தந்தைக்காக வீட்டிலேயே ஜிம் வசதி ஏற்படுத்தி கொடுத்ததாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் அதை தான் உபயோகிப்பதில்லை எனவும் கூறினார்.

இதையும் வாசிங்க:என்ன பார்த்தா அப்படியா தெரியுது!.. மார்க் ஆண்டனி டைரக்டரை கிட்டவே சேர்க்கல.. எஸ்.ஜே. சூர்யா பேச்சு!..

மேலும் விஷாலிடம் திருமணத்தை பற்றி பேசினால் நீங்கள் வேண்டுமானால் திருமணம் செய்து கொள்ளுங்கள் என கூறியதாகவும் ஆனால் இந்த வருட இறுதிக்கும் விஷால் தனது திருமணம் பற்றிய அறிவிப்பை கண்டிப்பாக வெளிவிடுவார் எனவும் நேர்காணல் ஒன்றில் விஷாலின் தந்தை கூறியுள்ளார். என்னதான் இருந்தாலும் ஒரு தந்தையாக தனது மகனின் திருமணம் குறித்த கவலை அவரிடம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story