நல்லா வாழ்ந்துட்டு இருந்த புள்ள! இந்த நடிகரால பிரியங்கா லைஃபே போச்சு - இப்படி போட்டு உடைச்சுட்டாங்க

by Rohini |
priyanka
X

priyanka

Anchor Priyanka: சின்னத்திரையில் மிக நீண்ட வருடங்களாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் பிரியங்கா. விஜய் டிவியில் மிகவும் புகழ்பெற்ற தொகுப்பாளினியாக இருக்கிறார். பல நிகழ்ச்சிகளை மிகவும் ஜாலியாகவும் நகைச்சுவையாகவும் தொகுத்து வழங்குவதில் பிரியங்கா ஆற்றல் பெற்றவர்.

அதற்காகவே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்து வருகின்றனர். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் பிரியங்கா.இவருடன் இணைந்து ம.கா.பா.ஆனந்தும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இதையும் படிங்க: ஒதுக்கிய பாலச்சந்தருக்கும் உதவிய விஜயகாந்த்.. என்ன மனுஷம்பா இவரு!..

இருவரும் செய்யும் அலப்பறைகள் செட்டில் இருக்கும் போட்டியாளர்களில் இருந்து பார்க்கும் ரசிகர்கள் வரை அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்துவிடும். அந்தளவுக்கு தன்னைத்தானே கிண்டலடித்தும் மற்றவர்களையும் நக்கலடித்தும் நிகழ்ச்சியை ஜாலியாக கொண்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் பிரியங்கா இந்த துறைக்கு வந்து கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த குறிப்பிட்ட கால இடைவெளியில் பிரியங்காவுடன் சேர்ந்து பயணித்தவர்கள் பிரியங்காவை பற்றி அவர்களுடைய அனுபத்தையும் சில மறக்கமுடியாத நினைவுகளையும் பகிர்ந்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் இப்படி தான் இருப்பார்! ரகசியம் சொன்ன பிரபல நடிகர்…

இதில் பிரியங்காவின் அம்மாவும் அந்த விழாவுக்கு வந்து பிரியங்காவிடம் ஒரு சத்தியத்தை வாங்கிக்கொண்டார். அதாவது முதலில் இருந்த வாழ்க்கையில்தான் தவறு நடந்து விட்டது. இனிமேல் அமையும் வாழ்க்கையிலாவது எந்த தவறும் நடக்காதவாறு மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும் , இருப்பேன் என்ற சத்தியத்தை வாங்கிக் கொண்டார் பிரியங்காவின் அம்மா.

அதே போல் நடிகரும் விஜய் டிவி ப்ராடக்ட்டுமான தீனாவும் பிரியங்காவை பற்றி கூறினார். அதாவது தீனாவுக்கு ஒரு படம் இயக்க வேண்டும் என ஆசையாம். அதனால் முதலில் தன்னையே வைத்து ஒரு படத்தை இயக்கி சோதனை செய்து பார்ப்பாராம். அதன் பிறகு விஜயை வைத்து இயக்க வேண்டுமாம்.

இதையும் படிங்க: விஜயகாந்த் செய்த தரமான 8 சம்பவங்கள்!.. சினிமா – அரசியல் இரண்டிலும் கலக்கிய கேப்டன்…

அதனால் முதலில் தன்னையே அழிக்க வேண்டும் என கூறும் போது அதில் குறிக்கீட்டு பேசிய பிரியங்கா ‘ச்ச அப்படிஎல்லாம் சொல்லாதே’ என சொல்ல உடனே தீனா ‘இந்தா உன் கூட இருந்து உன் வாழ்க்கையை வீணடிக்கல’ என நகைச்சுவையுணர்வுடன் கூறினார்.

Next Story