Connect with us
vijay

Cinema News

விஜயகாந்த் செய்த தரமான 8 சம்பவங்கள்!.. சினிமா – அரசியல் இரண்டிலும் கலக்கிய கேப்டன்…

Vijayakanth: நடிகர், முன்னாள் நடிகர் சங்க தலைவர், அரசியல்வாதி, எதிர்கட்சி தலைவர், தேமுதிக தலைவர், பலருக்கும் சோறு போட்டவர், பலருக்கும் உதவி செய்தவர், தங்க மனசுக்காரர், பாகுபாடு இல்லாமல் பழகியவர், எல்லோரையும் சமமாக நடத்தியவர், கஷ்டம் என யார் போனாலும் அவர்களின் பிரச்சனையை தீர்த்து வைப்பவர், வானத்தை போல மனம் படைத்த நல்லவர் என விஜயகாந்தை பொதுவாக எல்லோரும் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

ஆனால், அவர் மிகவும் தைரியமானவர். எந்த விஷயத்தையும் துணிந்து செய்தவர். யாருக்காகவும், எப்போதும், எதற்காகவும் அவர் பயந்தது இல்லை. அதேபோல், மனதில் தோன்றுவதை தைரியமாக பேசியவர். சினிமா, அரசியல் என இரண்டிலும் அவர் இதை பின்பற்றினார். செய்தியாளர்களிடம் அவரை போல கோபத்தை காட்டியவர்கள் யாரும் கிடையாது. அதனால்தான் விஜயகாந்த் ட்ரோல் செய்யப்பட்டார். ஆனால், அவர் தன்னை மாற்றிக்கொண்டதே இல்லை. கேமராவுக்கு முன்பு நடிக்க தெரியாத ஒரே அரசியல்வாதியாக இருந்தது விஜயகாந்த் மட்டுமே.

இதையும் படிங்க: விஜயகாந்த் நடிப்பில் அதிக நாட்கள் ஓடிய டாப் 15 படங்கள்!.. ரஜினி படத்தை தாண்டிய சின்னக் கவுண்டர்..

சினிமா, அரசியல் என இரண்டிலும் விஜயகாந்த் செய்த 8 தரமான சம்பவங்கள் பற்றி பார்ப்போம். விஜயகாந்த் சினிமாவில் நடிக்க வரும்போது ரஜினி பெரிய ஸ்டாராக இருந்தார். விஜயகாந்துக்கு தமிழை சரியாக உச்சரிக்க தெரியவில்லை என பலரும் சொன்னபோது ‘ரஜினி மட்டும் தமிழை சரியாக உச்சரிக்கிறாரா?’ என கேட்டார் விஜயகாந்த். இதுதான் முதல் சம்பவம்.

vijayakanth

திரைப்படக்கல்லூரி மாணவர்கள் என்றாலே ‘ஆர்ட் பிலிம் கோஷ்டி’ என நடிகர்களும், தயாரிப்பாளர்களும் ஒதுக்கியபோது அவர்களின் கதை, இசை, இயக்கத்தில் நடித்து அவர்களின் மீது வெற்றி முத்திரை குத்தியது விஜயகாந்த் செய்த இரண்டாவது சம்பவம். ஜெயலலிதா ஆட்சியில் கலைஞருக்கு பொன்விழா எடுக்க பெரிய நடிகர்களே யோசித்தபோது அந்த விழாவை தைரியமாக நடத்தியது மூன்றாவது சம்பவம்.

இதையும் படிங்க: நான் அப்படி நடிப்பேன்னு யாரும் நம்பல!.. ஒருத்தர தவிர!.. விஜயகாந்த் சொன்னது யாரை தெரியுமா?…

எம்.ஜி.ஆரும், சிவாஜியும் கட்டி காப்பாற்றிய நடிகர் சங்கம் கடனில் இருந்தபோது நடிகர்,நடிகைகளை திரட்டி கலைநிகழ்ச்சிகளை நடத்தி அந்த கடனை அடைத்ததோடு 2 கோடி இருப்பிலும் வைத்தது அவர் செய்த 4வது சம்பவம். கருணாநிதியும், ஜெயலலிதாவும் களத்தில் இருக்கும்போதே அரசியல் கட்சி துவங்கியது 5வது சம்பவம்.

முதல் தேர்தலிலியே தனது அரசியல் எதிரி பாமக பலமாக இருந்த விருதாச்சலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது கேப்டன் செய்த 6வது சம்பவம். 10 சதவீத வாங்கு வாங்கியை பெற்று ஜெயலலிதாவையும், கருணாநிதியையும் கூட்டணிக்காக ஏங்க வைத்து அலையவிட்டது அவர் செய்த 7வது சம்பவம். அதிமுகவோடு கூட்டணி வைத்து சட்டபைக்கு சென்றதால் ஜெயலலிதா பேசும் மேசையை தட்டும் கட்சியாகவே தேமுதிக இருக்கும் என எல்லோரும் நினைத்தபோது நாக்கை மடித்து கெத்து காட்டியது கேப்டன் செய்த தரமான 8வது சம்பவம்.

இதையும் படிங்க: விஜயகாந்த் மரண செய்தி கேட்டதும் ரஜினி செய்த முதல் காரியம்.. சொன்னது இதுதான்!…

google news
Continue Reading

More in Cinema News

To Top