எஸ்கே.வை எதிர்த்தா இதுதான் பதிலடி… உஷாரா இருக்கச் சொல்றாரோ விஜே பாவனா?

Published On: April 15, 2025
| Posted By : sankaran v
vj bavana, sk

சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தார். மிமிக்ரியிலும் அசத்தினார். அவர் தனது திறமையால் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தார். பல தடைகளைத் தாண்டி ஜெயித்துக் காட்டினார். அவரைப் பற்றிப் பல்வேறு விமர்சனங்கள் வந்தன.

ஆனாலும் அதை எல்லாம் தகர்த்தெறிந்து விட்டு தொடர்ந்து சாதனைகளை நோக்கிப் பயணம் செய்து வருகிறார். ஆரம்பத்தில் காமெடி கலந்த கதாநாயகனாக நடித்த அவர் அமரன் பட வெற்றிக்குப் பிறகு ஆக்ஷன் ஹீரோவாக மாறி உள்ளார். தற்போது பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வரும் 2026 பொங்கலையொட்டி ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் ஆவதாகத் தெரிகிறது.

amaran skஅதே நாளில்தான் விஜயின் ஜனநாயகன் படமும் ரிலீஸ். விஜய் தான் கோட் படத்தில் சிவகார்த்திகேயனுக்குத் துப்பாக்கியைக் கொடுத்தவர். அப்போது அவருக்குப் பிறகு அந்தக் காலியிடத்தை சிவகார்த்திகேயன்தான் நிரப்புவார். அதனால் தான் விஜயே அவரிடம் துப்பாக்கியைக் கொடுத்து படத்தில் சொல்லாமல் சொல்லி இருக்கிறார் என்றும் பேசப்பட்டது.

அந்த வகையில் தற்போது இவரது போராட்டக் குணம் குறித்து பிரபலம் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். என்னன்னு பார்ப்போமா…

ஸ்டார் விஜய் டிவியில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் விஜே. பாவனா. இவர் எஸ்கே. குறித்து இப்படி சொல்கிறார். சிவகார்த்திகேயனின் போராட்டக் குணம் எனக்கு ரொம்ப பிடிக்கும். துரோகம், வளர்ச்சியைத் தடுப்பது என அவருக்கு யாராவது எதையாவது செய்தால், அதெல்லாம் உடைத்து பல மடங்கு வளர்ச்சி அடைந்து சாதித்து விட்டு மீண்டும் அவர்களுடன் அன்புடன் இயல்பாகப் பழகக்கூடியவர். அப்படித்தான் அவர் கெடுதல் நினைப்பவர்களுக்குப் பதிலடி கொடுப்பார் என்கிறார் விஜே பாவனா.

சிவகார்த்திகேயன் குறித்து அவர் இணையதளத்தில் தன் படத்துக்குத் தானே விளம்பரம் கொடுக்கச் செய்வார். அவர் அடுத்த விஜயா என்றெல்லாம் அவர் மீது விமர்சனக் கணைகள் தொடுக்கப்பட்டன. ஆனாலும் அதை எல்லாம் காதில் வாங்காமல் அவர் தனது நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.