புஷ்பா 2 படத்தில் சமந்தாவின் குத்தாட்டம் இல்லை என்றும் அவருக்கு பதிலாக பாலிவுட் நடிகை நடனமாடப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் ரசிகர்களை கவர முக்கிய காரணமாக ”ஓ சொல்றியா மாமா” பாடல் அமைந்தது.
நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பின்னர் நடிகை சமந்தா ஓவர் கிளாமரில் அந்த பாடலுக்கு நடனமாடி இருப்பார். அந்த பாடலுக்காக நடிகை சமந்தாவுக்கு ஐந்து கோடி ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க: இந்த வாரமும் எதுவும் தேறாது!.. பாக்ஸ் ஆபிஸை படுக்கப் போட்டு மிதிக்கும் தமிழ் சினிமா!..
அந்த சம்பளம் புஷ்பா முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் எனக்கு இரண்டுக்கும் சேர்த்து சமந்தா நடனமாடத்தான் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் தற்போது புஷ்பா 2 படத்தின் சமந்தா நடனம் ஆடவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
அவருக்கு பதிலாக பாலிவுட் நடிகை த்ரிப்தி திம்ரி தான் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ஆடப் போவதாக கூறுகின்றனர். மேலும், த்ரிப்தி திம்ரிக்கு இந்த வாய்ப்பு கிடைக்க முக்கிய காரணமே ராஷ்மிகா தான் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
இதையும் படிங்க: சக்கைப்போடு போட்டாளே சவுக்கு கண்ணால!.. சமந்தாவை இப்படி பார்த்தா ராத்திரி தூக்கம் போயிடுமே பசங்களா!..
கடந்த ஆண்டு ரன்பீர் கபூருடன் இணைந்து ராஷ்மிகா நடித்த அனிமல் திரைப்படத்தில் இரண்டாவது நாயகியாக த்ரிப்தி திம்ரி நடித்திருப்பார். அந்த படத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காரணமாகத்தான் தற்போது புஷ்பா 2 படத்தில் அவர் நடனமாட வாய்ப்பு கிடைத்திருப்பதாக டோலிவுட்டில் பரவலாக பேசி வருகின்றனர்.
சமந்தாவை விட சூப்பர் கவர்ச்சியாக த்ரிப்தி திம்ரியின் நடனம் இருக்கும் என்றும் தேவிஸ்ரீ பிரசாத் இந்த படத்துக்கும் தரமான பாடல்களை கொடுத்துள்ளார் என்றும் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: எம்.ஆர்.ராதாவுக்கு விக் வைக்கிறது உலக மகா சாதனை… 52 தடவை ஜெயிலுக்குப் போன நடிகவேள்!
டோலிவுட்டின் இளம்…
இயக்குனர் லோகேஷ்…
ஐயப்ப பக்தர்களின்…
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…