பாலிவுட்டை காப்பாத்துனவருக்கே விருது இல்லையா!.. 6 விருதுகளை அள்ளிய அனிமல்.. கடுப்பான ஃபேன்ஸ்!..
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் என பல பவர்ஹவுஸ் நடிகர்கள் நடிப்பில் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி அனிமல் திரைப்படம் வெளியானது. நேற்று இரவு நடைபெற்ற பிலிம்பேர் விருதுகள் நிகழ்ச்சியில் அதிகபட்சமாக ஆறு விருதுகளை அனிமல் திரைப்படம் வென்றுள்ளது.
சிறந்த நடிகருக்கான விருதை அனிமல் திரைப்படத்தின் பலவித கெட்டப்புடன் வெரைட்டியான நடிப்பைக் கொடுத்து அசத்திய ரன்பீர் கபூருக்கு வழங்கப்பட்டது. சிறந்த இசை சிறந்த பாடல்கள் என ஒட்டுமொத்தமாக ஆறு விருதுகளை அந்த படம் தட்டிச் சென்றது.
இதையும் படிங்க: ரஜினியோடு நேரடியாக போட்டி போட்ட பாக்கியராஜ் படங்கள்… அட இந்த படமும் லிஸ்ட்ல இருக்கா!…
ஆனால், கடந்த ஆண்டு பதான், ஜவான் மற்றும் டங்கி என 3 வெற்றிப் படங்களை கொடுத்து நடிப்பில் அசத்திய ஷாருக்கான் பாதாளத்தில் கிடந்த பாலிவுட்டை மீண்டும் வெற்றிப் பாதைக்கு கொண்டு வந்த நிலையில் அவருக்கு சிறந்த நடிகருக்கான விருது உட்பட எந்த ஒரு விருதும் கிடைக்கவில்லையே என ஷாருக்கான் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
ரன்பீர் கபூருக்கு சிறந்த நடிகர் விருதும் அவரது மனைவி ஆலியா பட்டுக்கு சிறந்த நடிகை விருதும் வழங்கப்பட்டது. நெப்போடிசத்தின் உச்சியில் பாலிவுட் இருந்து வருகிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒரே ஒரு வீடியோ தான்!.. திடீரென சோஷியல் மீடியாவில் டிரெண்டான கவின்.. அதுதான் விஷயமா?..
அனிமல் திரைப்படத்திற்கு எதிராக பெரும் சர்ச்சை வெடித்து வரும் நிலையில், சிறந்த நடிகர் உள்பட 6 விருதுகள் அந்தப் படத்திற்கு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. விக்ராந்த் மசாய் நடித்த 12த் ஃபெயில் திரைப்படத்துக்கு சிறந்த படத்துக்கான விருதும் சிறந்த நடிகருக்கான கிரிடிக்ஸ் விருது விக்ராந்த் மசாய்க்கும் வழங்கப்பட்டுள்ளது.
COPYRIGHT 2024
Powered By Blinkcms