ரஜினியோடு நேரடியாக போட்டி போட்ட பாக்கியராஜ் படங்கள்… அட இந்த படமும் லிஸ்ட்ல இருக்கா!...

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கிடையே பல திரைப்படங்களின் மூலம் பல காலங்களிலும் போட்டிகள் நடைபெற்றன. ஆனால் அவை எதுவும் நிஜ வாழ்க்கையில் அவர்களின் எந்தவொரு உறவையும் எந்த வகையில் பாதிப்பதில்லை. அப்படங்களின் தொகுப்பை காணலாம்.

முதன் முதலில் பாக்கியராஜும் ரஜினிகாந்தும் மோதியது 1979ஆம் ஆண்டுதான். இந்த வருடத்தில் ரஜினிகாந்தின் நினைத்தாலே இனிக்கும் மற்றும் பாக்கியராஜின் புதிய வார்ப்புகள் திரைப்படம் போட்டியிட்டது. இவ்விரு திரைப்படங்களும் வெற்றியை பெற்றன. பின் அதே ஆண்டு ரஜினியின் ஆறிலிருந்து அறுபது வரை மற்றும் பாக்கியராஜின் கன்னிப்பருவம் திரைப்படமும் ரிலீஸ் ஆனது. ஆனால் இந்த முறை ரஜினிகாந்த் படம்தான் வெற்றியை பெற்றது.

இதையும் வாசிங்க:விஜயகாந்துடன் 8 முறை மோதிய விஜய் படங்கள்… ஜெயித்தது யாருன்னு தெரியுமா?

பின் அதே வருடம் ரஜினிக்கு அன்னை ஓர் ஆலயம் படமும் பாக்கியராஜின் சுவர் இல்லாத சித்திரங்கள் திரைப்படம் வெளியானது. ஆனால் இந்த போட்டியில் இருவருமே வெற்றி பெற்றனர். பின் 1980ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் அன்புக்கு நான் அடிமை பாக்கியராஜின் பாமா ருக்மணி திரைப்படம் வெளியானது. இந்த போட்டியில் அன்புக்கு நான் அடிமை திரைப்படமே வெற்றி அடைந்தது.

பின் அதே ஆண்டு ரஜினியின் பொல்லாதவன் திரைப்படமும் பாக்கியராஜின் குமரி பெண்ணின் உள்ளத்திலே திரைப்படம் போட்டியிட்டது. ஆனால் பாக்கியராஜின் திரைப்படம் பெரிதளவில் வெற்றிப்பெறவில்லை என்றுதான் கூறவேண்டும். பின் 1981ஆம் ஆண்டு ரஜினியின் கழுகு திரைப்படமும் பாக்கியராஜின் இன்று போய் நாளை வா திரைப்படமும் வெளியானது. ஆனால் இதில் பாக்கியராஜின் படமே மக்களிடையே வரவேற்பை பெற்றது.

இதையும் வாசிங்க:சிவாஜியின் 200வது படம்!… கணக்கு தெரியாமல் முழித்த சிவாஜியை அதிர வைத்த எம்.ஜி.ஆர்…

பின் ரஜினியின் தில்லு முல்லு, பாக்கியராஜின் விடியும் வரை காத்திரு திரைப்படம் வெளியானது. ஆனால் இவ்விரு திரைப்படங்களும் வெற்றியை பெற்றன. பின் 1982ஆம் ஆண்டு ரஜினியின் ரங்கா திரைப்படமும் பாக்கியராஜின் தூறல் நின்னு போச்சு திரைப்படங்கள் வெளியாகின. ஆனால் பாக்கியராஜின் திரைப்படமே இதில் வெற்றி பெற்றது. இதே ஆண்டு மூன்று முகம் மற்றும் டார்லிங் டார்லிங் திரைப்படம் வெளியானது. ஆனால் மூன்று முகம் திரைப்படமே இதில் வெற்றிப்பெற்றது.

பின் 1983 ஆன் ஆண்டு ரஜினியின் அடுத்த வாரிசு திரைப்படமும் பாக்கியராஜுக்கு முந்தானை முடிச்சு திரைப்படமும் வெளியானது. ஆனால் இதில் முந்தானை முடிச்சு திரைப்படமே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படி பல திரைப்படங்கள் வெளியாகின. என்னதான் ஒவ்வொருவரின் திரைப்படங்களும் வெற்றி பெற்றாலும் அவரவர் அவரவர் படங்களை முழு அர்பணிப்புடன் கொடுத்துள்ளனர்.

இதையும் வாசிங்க:எல்லாமே பொய்!. கலைஞர் விழாவில் ராஜ்கிரணை பார்த்து கண்ணீர் விட்ட வடிவேலு!.. போட்டோ பாருங்க!..

 

Related Articles

Next Story