விஜயகாந்துடன் 8 முறை மோதிய விஜய் படங்கள்... ஜெயித்தது யாருன்னு தெரியுமா?

விஜய் இளையதளபதியாக இருக்கும்போது அவர் வளர்ந்து வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கேப்டன் விஜயகாந்த் தான். அவரது படங்களில் சிறுவனாக இருந்தபோது சிறுசிறு வேடங்களில் நடித்தவர் தான் விஜய். அவருடன் இணைந்து தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சொன்னதற்காக செந்தூரப்பாண்டி படத்தில் நடித்தார்.

அந்தவகையில் விஜயகாந்த்துடன் நடித்ததால் தான் விஜய் பெரிய அளவில் திரை உலகில் அனைவராலும் கவனிக்கப்பட்டார். அவர் வளர்ந்து வந்த சமயத்தில் கேப்டன் படங்களுடன் 8 முறை இளையதளபதி விஜயின் படங்கள் மோதி உள்ளன. அவை பற்றிப் பார்ப்போம்.

இதையும் படிங்க... என்ன தெரியுதோ பாத்துக்கோ!.. குட்டி இடுப்பை காட்டி குஷியேத்தும் வேதிகா…

தாயகம் - கோயம்புத்தூர் மாப்பிள்ளை

1996ல் விஜயகாந்துக்கு தாயகம் படமும், விஜய்க்கு கோயம்புத்தூர் மாப்பிள்ளை படமும் ரிலீஸ். இவற்றில் தாயகம் 100 நாள்களைக் கடந்து ஓடி வெற்றி பெற்றது. விஜய் படம் சுமாராக ஓடியது.

தர்ம சக்கரம் - காலமெல்லாம் காத்திருப்பேன்

1997ல் விஜயகாந்துக்கு தர்ம சக்கரமும், விஜய்க்கு காலமெல்லாம் காத்திருப்பேன் படமும் ரிலீஸ். இவற்றில் 2 படங்களுமே சுமாராகத் தான் ஓடியது. என்றாலும் கேப்டனுக்குத் தான் வெற்றி. 2000த்தில் விஜயகாந்துக்கு வானத்தைப் போல படமும், விஜய்க்கு கண்ணுக்குள் நிலவு படமும் ரிலீஸ். இவற்றில் விஜயகாந்துதான் வின்னர். வெள்ளிவிழா கண்டது.

வாஞ்சிநாதன் - ப்ரண்ட்ஸ்

2001ல் விஜயகாந்தின் வாஞ்சிநாதன் படமும், விஜயின் ப்ரண்ட்ஸ் படமும் ரிலீஸ். இவற்றில் விஜயகாந்த் தான் வின்னர். அதே ஆண்டில் விஜயகாந்துக்கு தவசி படமும், விஜய்க்கு ஷாஜஹான் படமும் ரிலீஸ் ஆனது. இவற்றில் தவசி தான் மாஸ் ஹிட்.

இதையும் படிங்க... இளையராஜா அந்த இடத்துல வாத்தியாரு மாதிரி… மகன் -மகள்னுலாம் பார்க்க மாட்டாரு…

சொக்கத்தங்கம் - வசீகரா

2002ல் கேப்டனின் ராஜ்ஜியமும், விஜயின் தமிழன் படமும் ரிலீஸ். இவற்றில் விஜயகாந்த் தான் வின்னர். அதே ஆண்டில் விஜயகாந்த் நடித்த ரமணா படமும், விஜயின் பகவதி படமும் ரிலீஸ். இவற்றில் ரமணா தான் மாஸ் ஹிட்.

2003ல் விஜயகாந்தின் சொக்கத்தங்கம் படமும், விஜயின் வசீகரா படமும் வெளியானது. இவற்றில் விஜயகாந்த் தான் வின்னர். இந்த ஒப்பீட்டின்படி பார்க்கும்போது விஜயகாந்த் தான் வின்னர் என்பது தெரிகிறது.

 

Related Articles

Next Story