காப்பி அடிச்சாதான் 600 கோடி பாக்ஸ் ஆபிஸ் வருமா!.. அனிமல் படத்தின் அந்த சீனும் காப்பி தான்!..
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் மற்றும் அனில் கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள அனிமல் திரைப்படம் கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியானது. இதுவரை அந்த திரைப்படம் 680 கோடி வசூலை கடந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், அனிமல் படத்தில் இடம்பெறும் அந்த முக்கியமான சண்டைக்காட்சியை காப்பி அடித்துதான் உருவாக்கப்பட்டதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆஹா அல்வா மாதிரி இருக்கே!.. அப்படி திருப்பிக் காட்டாதீங்க தமன்னா.. சின்ன இதயம் படாரென வெடிச்சுடும்!..
கடந்த 2010-ல் மலையாளத்தில் இந்திரஜித் நடிப்பில் வெளியான நாயகன் திரைப்படத்தில் அதே போல மாஸ்க் அணிந்து கொண்டு பலர் தாக்க வர ஹீரோ சுத்தியல் ஒன்றை எடுத்துக் கொண்டு ஒட்டு மொத்த வில்லன்களையும் அடித்து நொறுக்கும் காட்சியை ஷேர் செய்து இதை காப்பி அடித்து தான் சந்தீப் ரெட்டி வங்கா அனிமல் படத்தை உருவாக்கி 600 கோடி வசூலை சாத்தியம் ஆக்கியுள்ளார் என கிண்டல் செய்து வருகின்றனர்.
அதற்கு முன்னதாக, 2003-ம் ஆண்டு வெளியான ஓல்ட் பாய் திரைப்படத்தில் இதே போல் ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்தை காப்பி அடித்து தான் நாயகன் படத்தில் சண்டை காட்சியே இடம் பெற்றது எனக் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டுல இருக்கவே உனக்கு தகுதியில்லை!.. விசித்ராவை நாக்கை புடுங்குற மாதிரி கேட்ட கூல் சுரேஷ்!..
அனிமல் மட்டுமல்ல அர்ஜுன் ரெட்டி படத்த்ல் இடம்பெற்ற அந்த போனில் காதலியிடம் பேசி விட்டு நேராக அவர் வீட்டுக்கே ஹீரோ செல்லும் அந்த சீனையும் சந்தீப் ரெட்டி வங்கா குட் ஃபெல்லாஸ் எனும் ஹாலிவுட் படத்தில் இருந்து சுட்டுத்தான் எடுத்துள்ளார். லியோ படமும் ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தின் இன்ஸ்பிரேஷன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்திலாவது தேங்க்ஸ் கார்டு போட்டனர். சந்தீப் ரெட்டி வங்கா அதைக் கூட செய்யவில்லை என விளாசி வருகின்றனர்.