இளையராஜா இடத்தை தட்டி தூக்கிய அனிருத்.! இந்த பெருமை ஏ.ஆர்.ரகுமானுக்கு கூட கிடைக்கவில்லையே.!
தமிழ் திரையுலகில் இளையராஜா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவர் இசையமைத்த மொத்த பட எண்ணிக்கை ரெக்கார்டை உலகில் எந்த இசையமைப்பாளரும் நினைத்து கூட பார்க்கமுடியாது. அந்தளவுக்கு தீயாய் பணியாற்றியுள்ளார். அதிக படங்கள் செய்தாலும், இசையில் அதிக கவனம் கொண்டு அனைத்து பாடல்களையும் மக்கள் மனிதில் பதியவைத்துள்ளார்.
அப்படி இளையராஜா இசையமைத்திருந்த காலத்தில் அப்போதைய முன்னணி நடிகராக இருந்த ரஜினி, கமல், விஜயகாந்த், மோகன், சத்யராஜ், பிரபு, கார்த்திக் என பலரது திரைப்படங்களுக்கும் ஒரே நேரத்தில் இசையமைத்து வந்தார்.
அதன்பிறகு இசையமைப்பாளர்கள் தொடர்ந்து புதியதாக வர ஆரம்பித்தனர். தேவா, ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர், பரத்வாஜ் என பலர் வளர தொடங்கினர். அதனால் அடுத்தடுத்து பெரிய ஹீரோ படமென்றால் ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் மற்ற ஹீரோ படங்கள் என்றால் வித்யாசாகர், பரத்வாஜ், மணிஷர்மா இசையமைத்து வந்தனர்.
அதன்பிறகுதான் ராக்ஸ்டார் அனிருத் என்ட்ரி. அவரது பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாக பரவி வந்தது. அதன் பிறகு பெரிய பெரிய நடிகர்களுக்கு அனிருத் இசையமைக்க தொடங்கி வந்தார். அந்த பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானதை தொடர்ந்து, அடுத்தடுத்து பெரிய படங்களுக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இதையும் படியுங்களேன் - அஜித்தும் விஜயும் ரகசிய சந்திப்பு.!? உண்மையில் நடந்தது என்ன.?!
தற்போது அந்த காலத்து இளையராஜா போல, அனைத்து முன்னணி நடிகர் படமும் அனிருத் கைவசம் வந்துள்ளது. கமல் நடிக்கும் விக்ரம், ரஜினியின் 169வது திரைப்படம், தளபதி விஜயின் பீஸ்ட், அஜித்தின் 62வது திரைப்படம், விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல், சிவகார்த்திகேயனின் டான், தனுஷின் திருச்சிற்றம்பலம் என பல திரைப்படங்களுக்கு ஒரே நேரத்தில் இசையமைத்து, இசையமைக்க அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார்.
இப்படி ஒரே நேரத்தில் கோலிவுட்டில் இருக்கும் அனைத்து பெரிய ஹீரோக்களுக்கும் இசையமைக்கும் பெருமை இளையராஜாவுக்கு அடுத்து, தற்போது அனிருத் கைவசம் வந்துள்ளது.