நீங்க வேண்டாம்… அவருக்கு தான் பர்ஸ்ட்டு… விஜயால் அனிருத் எடுத்திருக்கும் திடீர் முடிவு…
Anirudh: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படத்துக்கு தொடர்ந்து இசையமைத்து வரும் அனிருத் தற்போது விஜயிற்காக ஒரு பெரிய முடிவை எடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். அதிலும், ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைத்த பின்னர் அவரின் கேரியர் கணிசமாக உயர்ந்துவிட்டது. இதை தொடர்ந்து கமலின் இந்தியன், அஜித்தின் விடாமுயற்சி, ரஜினிகாந்தின் வேட்டையன், விக்னேஷ் சிவனின் லவ் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இதையும் படிங்க: சந்தானம் கல்யாணத்துக்கு போகாத சிம்பு!.. ஆனா அதுக்கு பதிலா அவர் செஞ்சதுதான் ஹைலைட்!..
ஜவான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இன்னமும் ஹிந்தியில் எந்த படத்திற்கும் அனிருத் இசையமைக்க ஒப்புக்கொள்ளவில்லை. தமிழை தாண்டி இதுவரை தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் தேவாரா படத்திற்கு மட்டும் இசையமைக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார். அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க இருக்கும் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக இருப்பார் என்ற தகவல்கள் ஏற்கனவே கசிந்தது.
தற்போது அனிருத்தின் பிஸி ஷெட்யூலால் அடுத்த பல மாதங்களுக்கு அவரால் வேறு படத்துக்கு இசையமைக்க முடியாத நிலை இருக்கிறது. இந்நிலையில் தளபதி69 படத்தின் அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கிறது. அப்படத்துக்கு அனிருத் இசையமைக்க வேண்டும் என்பது விஜய் தரப்பு கோரிக்கையாக இருக்கிறதாம்.
இதையும் படிங்க: முதல் சந்திப்பில் ராமராஜன் கேட்ட கேள்வி!. ஆடிப்போன திண்டுக்கல் லியோனி!.. நடந்தது இதுதான்!..
விஜயின் கடைசி படம் என்பதால் அனிருத்தும் தளபதி 69 படத்திற்கு இசையமைக்க ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அல்லு அர்ஜுன் படத்தை அனிருத் மறுத்து விடவும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது. மற்ற படங்களின் வேலை தொடங்கிவிட்டதும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்கிறது சினிமா வட்டாரம்.