அனிருத் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்களில் ஒருவர். இவர் தமிழ் திரைப்படங்கள் பலவற்றிலும் இசையமைத்துள்ளார். 2012ஆம் ஆண்டு தனுஷ் இயக்கத்தில் வெளியான 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் இடம்பெற்றா வொய் திஸ் கொலவெறி பாடம் சரியான வெற்றியை பெற்றது.
பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் திரைப்படத்தின் மூலம் இவர் இசை உச்சத்தை தொட்டது. இவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் சொந்தகாரார். சிறு வயது முதலே இசைமீது ஏற்பட்ட பிரியத்தால் இசையமைப்பாளராக வளர்ந்துள்ளார்.இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழி பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். விஜய் நடிப்பில் வெளியான வாத்தி கம்மிங், அரேபிக் குத்து போன்ற பாடல்களின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பெரும் பெயரை சம்பாதித்தார்.
இதையும் வாசிங்க:அவங்க ரெண்டு பேரும் சேர்ந்தா இவர தூக்கி சாப்பிட்ருவாங்க!.. சூதானமா இருக்கணும் சூரி..
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் இவரின் இசையை அதிரவிட்டிருந்தார். காவாலா மற்றும் ஹுக்கும் பாடல்களின் மூலம் மக்களிடையே இப்படத்தை பற்றிய விருவிருப்பை ஏற்படுத்தினார். ஜெயிலர் வெற்றி விழாவில் இவரின் இசை இல்லாமல் ஜெயிலர் பட வெற்றியே கிடையாது என அனிருத்க்கு புகழாரம் சூட்டியுள்ளார் சூப்பர் ஸ்டார்.
இவர் விஜய் நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள லியோ திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். இவ்வாறு தனது இளம் வயதிலேயே இவ்வளவு புகழை அடைந்த அனிருத் அடுத்தடுத்து வரும் படங்கள் அனைத்திலும் படுபிஸியாக உள்ளாராம்.
இதையும் வாசிங்க: விஜயை பார்க்குறதா? இல்ல இவர பார்க்குறதா? தளபதி68ல் வில்லனாக மச்சக்கார நடிகர் – தளபதி பாடு திண்டாட்டம்தான்
இயக்குனர் தேசிங்குபெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தினை பற்றிய வேறு எந்த அறிவிப்புகளும் இதுவரை வெளியிடபடாத நிலையில் இப்படத்திற்கு இசையமைக்க இசையமைப்பாளர் அனிருத்திடம் படக்குழு சென்றுள்ளனர். ஆனால் அனிருத் தான் வருகின்ற 6 மாதத்திற்கு படு பிஸியாக இருப்பதாகவும் என்னால் இப்போதைக்கு இசையமைத்து தர இயலாது எனவும் கூறிவிட்டாராம்.
தனுஷ் மற்றும் சிலம்பரசன்க்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாட்டினால்தான் அனிருத் இவ்வாறு கூறியிருப்பாரோ என்ற சந்தேகம் நெட்டிசன்கள் மத்தியில் உலாவி கொண்டிருக்கிறது. சிலம்பரசன் யுவன் காம்பினேஷன் நன்றாக இருக்கும் எனும் பட்சத்தில் படக்குழு அடுத்ததாக அவரை அணுகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் வாசிங்க: டூயட் ஆட முடியலைனாலும் மச்சக்காரன்தான்பா! ரெண்டு ஹீரோயின்களை தட்டித் தூக்கிய அஜித்